கருண் நாயரை செலக்ட் பண்ணாத காரணம் இதுதான்.. இந்த டீம்ல இந்த விஷயத்தை பாருங்க – அகர்கர் பேச்சு

0
538
Agarkar

தற்போது விஜய் ஹசாரே டிராபியில் ஏழு போட்டியில் 752 ரன்கள் குவித்திருக்கும் கருண் நாயருக்கு சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் வாய்ப்பு தராதது ஏன் என இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் காரணம் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாய் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு இன்று 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசி இருக்கிறார்கள்.

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர்

தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் போனில் இருக்கும் கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் அவரை இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. தற்போது அவர் ஏழு போட்டிகளில் ஆறு சதங்கள் அடித்து இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்த இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியில் கருண் நாயருக்கு இடம் தர வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியிருந்தார். அவர் கணித்தது போலவே தற்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஜித் அகர்கர் தந்த விளக்கம்

இது குறித்து இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது “உண்மையில் கருண் நாயர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி விளையாடுகிறார். 700, 750 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுபோன்று ஒருவர் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கும்பொழுது அவரை தவிர்க்க முடியாது. நாங்கள் அவர் குறித்து அணித்தேர்வின் போது ஆலோசனை செய்தோம். ஆனால் தற்போது இந்திய அணியில் அவருக்கான ஒரு இடத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது”

இதையும் படிங்க : பும்ரா கண்டிப்பா ஆடுவாரா.. சிராஜை நீக்க ஜெய்ஸ்வாலை சேர்க்க காரணம் என்ன? – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

“தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வீரர்கள் அனைவரையும் பாருங்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 40-க்கும் மேற்பட்ட ரன் சராசரி வைத்திருக்கிறார்கள். இப்படியானவர்களை கைவிட்டு கருண் நாயரை உடனடியாக இந்திய அணியில் எடுப்பது கடினமாக இருந்தது. எனவேதான் அவரை தேர்வு செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -