எங்க பசங்க கிட்ட ஓவரா பண்ணாதீங்க.. அப்படி பண்ணா கடைசியில இது நடக்கும் – ரோகித் சர்மா பேட்டி

0
692
Rohit

இன்று இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் ஏன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் விளையாடவில்லை என்பது குறித்து மனம் திறந்து நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறார்.

அவருடைய இந்த நீண்ட பேட்டியில் இந்திய வீரர்களை சீண்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் பற்றிய கேள்விக்கு மிகவும் காட்டமாகவே பதில் அளித்திருக்கிறார். அவருடைய முழு பேட்டையில் இருந்து பார்க்கும் பொழுது அவர் இன்னும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

நேற்று களத்தில் சண்டைக்கு காரணம்

நேற்றைய நாள் முடிவில் களத்தில் இருந்த கவாஜா நேரத்தை ஓட்டுவதற்காக தாமதம் செய்து கொண்டு இருந்தார். இன்னும் ஒரு ஓவர் கூடுதலாக வீசுவதற்காக பும்ரா வேகமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதன் காரணமாக பும்ரா கவஜாவை சீக்கிரம் தயாராகும் படி கூறினார். மேலும் இப்படியான காலதாமதங்கள் வேண்டும் என்று செய்யக்கூடாது.

இந்த நிலையில் பந்துவீச்சாளர் முனையில் நின்றிருந்த சாம் கான்ஸ்டாஸ் தேவையில்லாமல் பும்ராவிடம் வம்பு இழுத்தார். பும்ராவும் திருப்பி அவருக்கு ஏதோ பதில் அளிக்க நடுவர் அவரை திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் அடுத்த இரண்டாவது பந்தில் கவாஜாவை வெளியேற்றி கான்ஸ்டாஸ்க்கு பதிலடி கொடுத்தார். மேலும் அதனுடைய தொடர்ச்சி இன்றும் களத்தில் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எங்கள் வீரர்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க மாட்டார்கள்

இதுகுறித்து ரோகித் சர்மா பேசும்பொழுது “எங்களுடைய வீரர்கள் அமைதியாக இருக்கும் வரை அமைதியாக இருப்பார்கள். அவர்கள் தாமாக யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களைத் தொடர்ந்து வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அவர்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க மாட்டார்கள். அதற்கான பதிலடி யை திருப்பித் தருவார்கள்”

இதையும் படிங்க : கான்ஸ்டாஸ் செஞ்சது எனக்கு இளம் கோலியை ஞாபகப்படுத்துச்சு.. பும்ரா சரியா இத செஞ்சாரு – கவாஸ்கர் பேட்டி

“கிரிக்கெட் பொறுத்த வரையில் நாம் விளையாடுவது சம்பந்தப்பட்டது. நாம் அதற்காக என்ன செய்கிறோம் என்பது சம்பந்தப்பட்டது. கிரிக்கெட் வாயால் விளையாடப்படுவது கிடையாது. எங்களுடைய வீரர்கள் மிகவும் சிறப்பானவர்கள். அவர்கள் தங்களுடைய விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -