கவஜா அவுட் ஆனதுக்கு.. அந்தப் பையன்தான் காரணம்.. சொல்லி குடுங்க இதெல்லாம் தேவையே இல்ல – டாம் மூடி பேட்டி

0
4338

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி இளம் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா ஐந்தாவது டெஸ்ட்

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடித்து வெளியேறினாலும் விராட் கோலி உடனான பிரச்சனை இவரை சமூக வலைதளங்களில் பெரிதாக காட்டியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது தொடக்க வீரர் கவாஜா வேண்டுமென்றே பும்ராவை பந்து வீச விடாமல் நேரத்தை வீணடித்தார்.

இந்த நிலையில் பும்ராதான் நேரத்தை வீணடித்ததாக நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சாம் பும்ராவிடமே இதைக் கூற, இதனால் கோபமடைந்த பும்ரா அந்த ஓவரிலேயே கவாஜாவை வெளியேற்றினார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாப் மூடி சாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனவும் இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது தேவையில்லாத வேலை

இது குறித்து அவர் கூறும் பொழுது “சாம் கான்ஸ்டாஸ் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ட்ரெஸ்ஸிங் ரூம் அவரது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அடக்காமல் அவருக்கான சிறந்த வழியை காட்டும் என்று நான் நம்புகிறேன். இந்தப் போட்டியில் கவாஜா அனைத்தையும் தனது கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் எதிர் முனையில் இருந்த அவரது பார்ட்னர் செய்த செயலால் அவருக்குத் தேவையே இல்லாத கவனச் சிதறல் உண்டாகி இருக்கிறது” என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:முன்னாள் சிஎஸ்கே வீரர் சதம் வீண்.. புதிய உலக சாதனை படைத்த கருண் நாயர்.. விஜய் ஹசாரே ட்ராபி 2024-25

இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. இன்னும் நான்கு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய இந்திய அணியை எதிர்கொள்ள வலுவான இலக்கை நிர்ணயிக்க முயற்சிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவே நாளைய போட்டியில் இந்திய அணி விரைவாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்துமா? அல்லது ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் செயல்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -