யாருமே இதை செய்யாதப்போ.. ரிஷப் பண்ட் அடி வாங்கி போராடுனாரு.. இது அவரோட பெஸ்ட் – இர்பான் பதான் பேட்டி

0
251

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் ரிஷப் பண்ட் அணியின் சூழ்நிலையை உணர்ந்து நிதானமாக விளையாடினார்.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் பும்ரா தலைமையில் ஆன இந்திய அணி இன்று களம் இறங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்ய இந்திய அணி தீர்மானித்தாலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்றாக சாதகமான முறையில் இருந்தது. அனைத்து முன்னணி வீரர்களும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேற ரிஷப் பண்ட் மட்டும் ஒரு முனையில் நின்று போராடினார்.

குறிப்பாக ஆட்டத்தின் 35வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ரிஷப் பந்தின் கையில் பட்டு பெரிய காயத்தை உண்டாக்கியது. இந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி 98 பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 40 ரன்கள் குவித்து எதிர்பாராத முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ரிஷப் பண்ட் விளையாடிய இன்னிங்ஸ்களிலேயே இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரிஷப் பண்ட் பந்தின் நீளத்திற்கு தகுந்தவாறு தன் உடல் வடிவமைப்பை வைத்தார். ரிஷப் பண்ட் குறித்து அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் இன்று அவர் விளையாடிய விதம் மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். யாருமே 30 ரன்கள் கூட கடக்காத நிலையில் அவர் 40 ரன்கள் எட்டினார். அவர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டார். அவுட் ஆகாமல் இருக்க தனது உடலில் பந்துகளை வாங்கினார்.

இதையும் படிங்க:பும்ரா கூட வேணும்னே பிரச்சனை பண்ணாங்க.. எனக்கு தெரியும்.. அதுக்கு இதுதான் காரணம் – ரிஷப் பண்ட் பேட்டி

மேலும் ரிஷப் பண்ட் லேசான அழுத்தத்தில் இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவரது வெளிப்புற அழுத்தமும் தெரிந்தது. அவர் உடலில் அடிபட்டார் ஆனால் அதையும் மீறி போராடினார். இது ஒரு சிறந்த இன்னிங்ஸ் என்று நான் உணர்கிறேன்” என இர்பான் பதான் கூறியிருக்கிறார். பும்ரா இறுதிக்கட்டத்தில் 17 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்கள் அடிக்க இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -