733 நாட்கள்.. முதல் 50.. முடிவுக்கு வந்த பாபர் அசாமின் மோசமான சாதனை.. கடைசி கட்டத்தில் பாக் தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்

0
755

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் டி20 தொடரை பாகிஸ்தான் அணியும், ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் குவிக்க அதற்கு பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 301 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க வீரர் அயூப் 27 ரன்னில் ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேற, பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்தார். 85 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தை பதிவு செய்த நிலையில் ஆட்டம் இழந்தார். பாபர் அசாம் கடைசியாக டிசம்பர் 26, 2022 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது அரை சதத்தை பதிவு செய்த நிலையில் அதற்குப் பிறகு சரியாக 733 நாட்களுக்குப் பிறகு தனது 27ஆவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அதற்குப் பிறகு மிடில் வரிசை ஆட்டக்காரர் ஷகீல் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய மற்றும் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 237 ரன்கள் குவித்துள்ளது. பந்து வீச்சில் கலக்கிய தென் ஆப்பிரிக்க அணியின் மேர்கோ ஜான்சன் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க:231 ரன்.. 23 போர் 3 சிக்ஸ்.. ஒரே நாளில் 3 சாதனை படைத்த ஆப்கன் அணி.. ஜிம்பாப்வே மோசமான சாதனை.. முழு விபரம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கிய நிலையில் டோனி 2 ரன், ரிக்கல்டன் டக் அவுட், ஸ்டெப்ஸ் ஒரு ரன்னில் வெளியேற தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 22 ரன்னிலும் மற்றும் கேப்டன் பவுமா ரன் எடுக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 121 ரன்கள் தேவைப்படும் நிலையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -