இன்று ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரு தனிச் சாதனை படைக்க, ஆஸ்திரேலியா அணி அறிமுக வீரரின் அசத்தல் ஆட்டத்தால் வலிமையான நிலையில் இருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானர். மேலும் ஹேசில்வுட் இடத்தில் ஸ்காட் போலன்ட் இடம்பெற்றார். இந்திய அணியில் கில் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆச்சரியப்படும் விதமாக இடம் பெற்றார்.
அறிமுக வீரரின் அசத்தல் பேட்டிங்
இந்த போட்டியில் அறிமுகமான துவக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் அசத்தலான அதிரடி பேட்டிங் மூலம் 65 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 57 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.
இதைத் தொடர்ந்து வந்த மூன்றாவது இட வீரர் லபுசென் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து நான்காவது இடத்தில் விளையாடிய ஸ்மித் இன்று ஆட்டம் இழக்காமல் 68 ரன்கள் எடுத்திருக்கிறார். ஹெட் 0, மார்ஸ் 4, அலெக்ஸ் கேரி 31 ரன்கள் எடுத்தார்கள். இன்று ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
பும்ரா சாதனை – ஆஸி புது பிளான்
இன்றைய போட்டியில் பும்ரா மூன்று விக்கெட் கைப்பற்றிய இதன் மூலம் இந்த தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் பிஜிடி தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு கும்ப்ளே 24 விக்கெட் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விராட் கோலி என் தோள்மேல் இடித்தார்.. அந்த நேரத்துல உண்மையில இதுதான் நடந்தது – சாம் கான்ஸ்டாஸ் தகவல்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் பும்ராவை தாக்கி விளையாடுவது என்கின்ற புது திட்டத்தை ஆஸ்திரேலியா கொண்டுவந்தது. அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் அதை செய்தார். இறுதியில் அலெக்ஸ் கேரி அப்படியே செய்ய முயற்சி செய்தார். எனவே இந்த திட்டம் தெளிவாக தெரிந்தது. மேலும் இந்திய அணி ஒரு கட்டத்தில் போட்டியை இழந்த நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியை 350 ரண்களுக்குள் ஆல் அவுட் செய்தால், இந்த போட்டியை இந்திய அணி வென்று மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பிஜிடி கோப்பையை கையில் எந்த வாய்ப்பு இருக்கிறது!






