போதும் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன்.. இவங்களுக்கு நன்றி சொல்லலனா நல்லா இருக்காது – அஸ்வின் உருக்கமான பேச்சு

0
2324

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி போட்டியை இந்தியாவில் விளையாட விரும்பாமல் கூட ஓய்வு முடிவை ஆஸ்திரேலியாவில் வைத்து எடுத்திருக்கிறார். இந்த முடிவுக்கான காரணங்கள் குறித்து அவர் பேசியும் இருக்கிறார்.

- Advertisement -

மூன்று வடிவங்களிலும் ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் 200 இன்னிங்ஸ்களில் 537 விக்கட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 114 இன்னிங்ஸ்களில் 156 விக்கெட்டுகள், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 156 இன்னிங்ஸ்களில் ஆறு சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் உடன் 3503 ரன்கள் அடித்திருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது வென்றதில் சாதனை வீரர் முத்தையா முரளிதரனை சமன் செய்திருக்கிறார். தமிழகத்திலிருந்து இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாடியவர்களில் அஸ்வின் மிகப்பெரிய சாதனையாளராக விளங்குகிறார்.

- Advertisement -

இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

தனது ஓய்வு முடிவு குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் இதுவே எனக்கு கடைசி ஆண்டாக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் விளையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதை கிளப் கிரிக்கெட்டில் வெளிப்படுத்த விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்”

“நான் இந்திய அணியில் மிகவும் வேடிக்கையாக இருந்தேன். கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து பல வீரர்களுடன் நல்ல நினைவுகளை உருவாக்கி இருக்கிறேன். அவர்களில் சிலரை கடந்த ஆண்டு அணியில் நான் இழந்து இருக்கிறேன். நாங்கள்தான் ஓஜிகளின் கடைசி அணியாகவும். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த கடைசி தேதி இதுதான்”

இதையும் படிங்க : 89 ரன் 7 விக்கெட்.. பரபரப்பை கிளப்பிய இந்திய அணி.. முடிந்த 3வது டெஸ்ட்.. காப்பாற்றிய மழை

“என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தில் நான் நன்றி சொல்வதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் மிகக்குறிப்பாக நான் பிசிசிஐ மற்றும் என்னுடைய சக வீரர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால், என்னுடைய கடமையில் இருந்து தவறிவிட்டவனாக ஆகிவிடுவேன். எனவே முதலில் இவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -