இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்து விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தடுமாறி வரும் ரோகித் சர்மா
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இணைந்த ரோகித் சர்மா திரும்பவும் பேட்டிங் ஃபார்மேல் தடுமாறி வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலைமையில் இருந்த போது கூட 10 ரன்னில் வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் இன்னும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா திரும்ப பேட்டிங் ஃபார்முக்கு வர வேண்டியது கட்டாயமானதாக இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா விளையாடிய விதத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
ரோஹித் குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் செய்த செயல்களில் இருந்து கொஞ்சம் ஆற்றலை தற்போது பெற வேண்டும். மிகவும் மேகமூட்டமான நாளில் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி ஒரு பந்தை எப்படி விட்டு நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று காட்டியிருந்தனர். இதில் ரோகித் சர்மா தன்னை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:நாங்கள் ஜடேஜாவிடம் எதிர்பார்ப்பது இந்த ஒரு விஷயம்தான்.. இப்போ நிலைமை மாறி இருக்கு – கேஎல் ராகுல் பேட்டி
அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் செயல்பட்டால் அது இந்தியாவுக்கு மிகவும் நல்ல விஷயமாக அமையும். அது இந்திய அணியை சமநிலைக்கு கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி ரோஹித் 83 ரன்களும் கேஎல் ராகுல் 129 ரன்களும் குவித்தனர். சிறப்பாக இந்த ஜோடி விளையாடியதால் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.






