கபில்தேவ் தோனி இதுல பெஸ்ட்.. ஆனா இந்த ஒரு விஷயத்துல தோனிதான் முன்னாடி இருக்கார் – கவாஸ்கர் கருத்து

0
28

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை வரலாற்றில் பதியக்கூடிய இரண்டு பெயர்களாக கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் கேப்டனாக இருந்த காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளே இதற்கு ஒரு பெரிய உதாரணம்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் தோனி மற்றும் கபில்தேவ் ஆகியோரின் கேப்டன்ஷிப் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய இரண்டு ஜாம்பவான் வீரர்கள்

1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய மக்களிடையே கிரிக்கெட் போட்டி மிக வேகமாக பிரபலம் அடைய தொடங்கியது. அப்போது ஜாம்பவான் அணியாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையும், 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இந்த இரண்டு ஜாம்பவான்களுமே இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் சென்றதில் பெரும்பங்காற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இருவரது கேப்டன்ஷிப்பில் அணி வீரர்கள் விளையாடிய விதம் குறித்தும், மேலும் மகேந்திர சிங் தோனி கபில்தேவை விட சற்று மேலோங்கி இருப்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கபில்தேவை விட தோனி மேலோங்கி இருக்கிறார்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு அணியில் ஒரு கேட்ச் கைவிடப்பட்டாலோ அல்லது பீல்டிங் தவறாக செய்தாலோ கேப்டனுக்கு அது கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தினால் அணி வீரர்கள் இன்னும் பதட்டம் அடைகிறார்கள். ஆனால் கபில்தேவ் மற்றும் தோனி ஆகியோர் இந்த விஷயத்தில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இருக்கின்றனர்.இதனால் வீரர்கள் பாதிக்கப்படாமல் சுதந்திரமாக தங்களது சொந்த விளையாட்டை விளையாடினர்.

இதையும் படிங்க:ஓய்வு முடிவை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.. உணர்ச்சிகரமான பதிவு

ஆனால் உலகக்கோப்பைகளை வெல்வது என்று வரும்போது கபில் தேவை விட எம்எஸ் தோனி சற்று முன்னோக்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஒரு நாள் உலகக்கோப்பையை மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையையும் வெற்றி பெற்று இருக்கிறார். இதனால் அவர் எப்போதும் அதே இடத்திலேயே இருப்பார் என்று நினைக்கிறேன்” என கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -