ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் மிகக் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து அணிகளும் சிறப்பான வீரர்களை வாங்கி அணியை வலுப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி வீரரும், பஞ்சாப் அணிவீரருமான அர்ஸ்தீப் சிங் சென்னை வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடும் விதம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பஞ்சாப் அணி வீரர் அர்ஸ்தீப் சிங்
டி20 கிரிக்கெட்டில் நம்பகத்தன்மை கொண்ட வீரராக வேக பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட ஆரம்பித்த நிலையில் இவரது சிறந்த பந்துவீச்சை கண்டு இந்திய அணி நிர்வாகம் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இறுதிக்கட்டத்தில் எந்தவிதமான பந்து வீச்சளராக இருந்தாலும் அவரை அடித்து நொறுக்கும் திறன் படைத்தவர். இறுதி கட்டத்தில் களமிறங்கி பல போட்டிகளை தனது அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தோனி குறித்து அர்ஸ்தீப் சிங் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தோனிக்கு திட்டமே இருக்காது
இதுகுறித்து அவர் கூறும் போது “மகேந்திர சிங் தோனி களத்தில் இருக்கும்போது அவரை எப்படி விரைவாக வீழ்த்தி வெளியேற்ற வேண்டும் என்பதை எனது திட்டமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களுக்கான திட்டம் என்னிடம் உள்ளன. ஆனால் தோனி விளையாடும்போது அவருக்காக ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருக்க முடியாது. ஒரு பந்துவீச்சாளரை எப்போது சிக்ஸர் அடிக்க வேண்டும் எப்போது அடிக்க கூடாது என்பது அவருடைய மனநிலையை பொறுத்து மட்டுமே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:4 ஓவர்.. 4 விக்கெட்.. ரஷீத்கான் அபார பந்துவீச்சு.. 3வது டி20யில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆப்கன் வெற்றி
தற்போது பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அர்ஸ்திப் சிங் தற்போது நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை 18 கோடிக்கு பஞ்சாப் அணி திரும்ப ஆர்டிஎம் முறையில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் பஞ்சாப் அணி வலுவாக இருக்கும் நிலையில் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்று பல ஆண்டு கனவை இந்த முறை நிறைவேற்றும் என்பதே பஞ்சாப் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.






