அடுத்த டெஸ்ட்.. ஆஸ்திரேலிய பிளேயிங் XI அறிவிப்பு.. ஜெயித்தும் முக்கிய வீரர் நீக்கம்.. இந்திய அணிக்கு பின்னடைவு

0
131
Australia vs India 3rd Test

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் 11 தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியோடு ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேஸில்வுட் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அப்போது அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய போலன்ட் திரும்ப ஆஸ்திரேலியா அணிக்கு அழைக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியான பகல் இரவு ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் தொடரில் முன்னிலை பெற போகும் போட்டியான மூன்றாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய ஜாஸ் ஹாஸில்வுட் காயம் குணமாகி உள்ள நிலையில் திரும்ப ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார்.

- Advertisement -

திரும்ப வருகிறார் ஜாஸ் ஹெஸில்வுட்

பயிற்சி ஆட்டத்தில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோருடன் இணைந்து தனது பயிற்சியை தொடங்கி நன்றாக பந்து வீசி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போலன்ட் மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். எனவே ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸில்வுட் கூட்டணி இந்திய அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இருக்கும் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு இதே கபா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 325 ரன்.. 25 பந்து மீதி.. வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி.. 46 வருட சாதனையை செய்த அறிமுக வீரர்.. பங்களாதேஷ் அணி மீண்டும் தோல்வி

இந்திய அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்:

நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா மார்னஸ் லபுஷேன்,ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஸ் ஹாஸில் வுட் .

- Advertisement -