ஆர்சிபி இளம் இந்திய பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் பெரிய சிக்ஸ் அடிக்க தங்கள் அணி வீரர்களை நம்புகிறார் மேலும் இந்த சவாலை தினேஷ் கார்த்திக் ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டு பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர் சி பி அணி நிர்வாகம் ஓரளவுக்கு பழைய தவறுகளை செய்யாமல் நல்ல அணியை உருவாக்கி இருப்பதாகவே கருதப்படுகிறது. வில் ஜேக்ஸை வாங்காதது மட்டுமே விமர்சனமாக இருந்து வருகிறது.
நம்பிக்கை அளிக்கும் மிடில் ஆர்டர்
ஆர்சிபி அணி நிர்வாகம் துவக்க வீரராக அதிரடி ஆட்டக்காரர் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்டை வாங்கியது. அதே சமயத்தில் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங் இடத்துக்கு இந்திய கிரிக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரை வாங்கி அந்த இடங்களை வலிமையாக்கி இருக்கிறது.
ஆர்சிபி அணி பொதுவாக முதல் மூன்று அல்லது நான்கு இடங்களுக்கு நல்ல பேட்ஸ்மேன்களை வாங்கும். ஆனால் போட்டியை எடுத்துச் செல்ல நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் நல்ல பினிஷரை வாங்காது. பெரும்பாலும் இந்த முக்கியமான வேலைகளுக்கு அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இது அந்த அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது. தற்பொழுது இதில் நல்ல முறையில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள்.
சிக்ஸ் ஹிட்டிங் சேலஞ்ச்
இது குறித்து ரஜத் பட்டிதார் பேசும் பொழுது “ஒரு டி20 போட்டியில் மிடில் ஆர்டரில் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் விளையாடக்கூடியவர்கள், எப்போதும் அதிரடியாக விளையாடுவதற்கு இன்டென் காட்டக் கூடியவர்களாக இருப்பது மிகவும் முக்கியமானது. எங்களின் பேட்டிங் ஆர்டர் இந்த முறை இதில் கவனம் செலுத்தும் என்று நான் நம்புகிறேன்”
“லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் மூவரில் ஒருவர் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் மிக நீண்ட சிக்சரை அடிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இதை தினேஷ் கார்த்திக் பாய் பார்த்தால், அவரும் இந்த சவாலை எடுத்துக் கொள்ளலாம்”
இதையும் படிங்க : ஐபிஎல்-ல இருக்க இந்த விஷயம்.. சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்ல இருக்கக் கூடாது.. காரணம் இதான் – ஜாக் காலிஸ் பேட்டி
“இந்த முறை எங்களிடம் நல்ல துவக்க வீரர்கள் மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங் என சிறப்பான முறையில் பேட்டிங் யூனிட் அமைந்திருக்கிறது. மேலும் பந்துவீச்சிலும் எல்லா பக்கங்களிலும் சரியான வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் ஒரு முழுமையான அணியாக குறைகள் இல்லாமல் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






