ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாபேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில்நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் நவீன் உல் ஹக் ஒரு ஓவருக்கு 13 பந்துகள் வீசிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டி
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 ஹராரேவில் நடைபெற்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிடில் வரிசை ஆட்டக்காரர் கரீம் ஜனாத் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் அதிரடியாக விளையாடிய நபி 27 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 44 ரன்கள் குவித்தார்.
ஜிம்பாப்வே அணித்தரப்பில் குவரா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 14 வது ஓவர் வரை ஜிம்பாப்வே அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்திருந்த நிலையில் 15வது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் வீசினார். முதல் பந்தில் வைடாக வீச அடுத்த பந்தில் ஒரு ரன் கொடுத்தார். இரண்டாவது பந்து நோ பால் ஆக வீச அதற்குப் பின்னர் இரண்டாவது பந்தையே தொடர்ந்து வைடு பந்துகளாக வீசி நான்கு முறை வீசினார்.
திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
அதற்குப் பின்னர் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி கொடுக்க, அதற்கு அடுத்து மூன்று பந்துகள் நன்றாக வீச, திரும்பவும் கடைசி பந்தை வைடாக வீசினார். இப்படி 15 வது ஓவரின் ஒரு ஓவருக்கு 13 பந்துகள் வீசி வினோத சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி 15 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்தது. அந்த ஓவர் மட்டுமே ஜிம்பாப்வே அணி முன்னிலை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க:ஜோ ரூட் இல்லை.. உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தற்போது இவர்தான் – ஆஸி ரிக்கி பாண்டிங் கணிப்பு
இதற்குப் பிறகு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட, ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் திரில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வருகிறது வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






