ரோகித் கேப்டன்சி மோசம்தான்.. ஆனா அதுக்கு பின்னாடி பும்ரா விஷயமும் இருக்கு – முகமது கைஃப் பேட்டி

0
210
Kaif

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு பந்துவீச்சாளரை மட்டுமே நம்பி இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணியின் துருப்புச் சீட்டாக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்டின் போது அவருக்கு தொடை பகுதியில் காயம் இருந்தது பெரிய கவலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு இரண்டு பெரிய பிரச்சனைகள்

தற்போது இந்திய அணியில் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் முகமது சிராஜ் உண்மையில் இந்திய அணிக்கு மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராகவே செயல்பட்டு வந்தவர். தேவைப்படும் பொழுது அவருடைய இடத்திற்கு வேறு யாரையாவது கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தது.

இதற்கு மிக முக்கிய காரணமாக ஷமி மற்றும் பும்ரா இந்திய அணியின் முதல் இரண்டு முக்கிய இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் ஷமி காயம் அடைந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது பும்ராவும் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு தன்னம்பிக்கையை பெரிய அளவில் குறைத்து இருக்கிறது. மூன்றாவது டெஸ்டில் அவர் களமிறங்குவாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

- Advertisement -

ரோகித் கேப்டன்சி மோசம்தான்

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “நாம் இன்னும் தொடரை இழக்கவில்லை. ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில்தான் இருக்கிறது. எனவே பீதி அடைய தேவை இல்லை. திட்டமிடல்கள் சிறப்பாக இருக்க வேண்டும். அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். ரோகித் சர்மா கேப்டன்சி சுமாராகத்தான் இருந்தது. ஆனால் அவர் பும்ராவுக்கு நீண்ட ஸ்பெல் வீசுவதற்கு கொடுக்க முடியாது. அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது”

இதையும் படிங்க : சிராஜுக்காக நான் உண்மையில் வருத்தப்பட்டேன்.. அன்னைக்கு களத்தில் நடந்தது இதுதான் – ரிக்கி பாண்டிங் ஆதரவு

“ஒரே பந்துவீச்சாளரை நம்பி இருக்கும் இதுபோல அணியை நான் பார்க்கவில்லை. தற்பொழுது அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் விளையாடவில்லை. பும்ரா காயமடைந்தால் நீங்கள் தொடரை மறந்து விட வேண்டியதுதான். அதனால்தான் அவருக்கு சிறிய அளவில் மட்டுமே பந்து வீச ரோகித் வாய்ப்பு கொடுக்கிறார். பும்ராவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரோகித்துக்கு இருக்கிறது. மேலும் பும்ரா தனி ஒரு பந்துவீச்சாளராக இருப்பதால், அவர் உடைந்து விடக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -