இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் சூழ்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்ட காரணம் குறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா பிங்க் டெஸ்ட்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் வாய்ப்பு பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என தனது திறமையை நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு தினம் முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டதற்கான காரணத்தை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டெஸ்கோதே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அஸ்வின் வந்த காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பேட்டிங்கை வலுப்படுத்த விரும்பினோம். மேலும் நிதிஷ் குமார் ரெட்டியை முதல் டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வந்தோம். மேலும் பந்துவீச்சை வலுப்படுத்த விரும்பிய நிலையில் சோதனை முயற்சியாக ரவிச்சந்திரன் அஸ்வினை இரண்டாவது போட்டிக்கு கொண்டு வந்துள்ளோம்.
இதையும் படிங்க:ஆஸிக்கு எதிரா நித்திஷ் ரெட்டி செஞ்சது அபூர்வமா இருக்கு.. இளம் வீரர் யாரும் இப்படி செய்யல – ஹர்பஜன் சிங் பேட்டி
ஏனென்றால் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அவர் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார். நிதீஷ் குமார் ரெட்டி ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்ய, அஸ்வின் அதற்குப் பிறகு எட்டாவது இடத்தில் களம் இறங்குகிறார். மேலும் இந்த பந்தில் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம்” எனக் கூறியிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 22 பந்துகளில் 22 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






