ஆஸில எங்கள் இலக்கு இதுதான்.. இப்ப என்ன நடக்குதோ அதை தொடர விரும்புறேன் – கேப்டன் ரோஹித் பேட்டி

0
58

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்திருக்கும் இந்திய அஅணி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா வந்தடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது குழந்தை பெற்றெடுக்க இருந்த காரணத்தால் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இந்திய அணியும் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் விளையாடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. முதல் டெஸ்ட் போட்டி விளையாடிக் கொண்டிருந்த சமயத்திலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா வந்தடைந்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரோகித் சர்மா சமீபத்தில் ஆஸ்திரேலியா பிரதமரை சந்தித்த நிலையில் இந்திய அணி வீரர்களும் பிரதமரை சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சூழ்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மக்கள் குறித்தும் டெஸ்ட் தொடர் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதே முக்கிய இலக்கு என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே எப்போதும் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி வர்த்தக ரீதியான உறவாக இருந்தாலும் சரி பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நாங்கள் எப்போது இங்கு வந்தாலும் ஆஸ்திரேலியா கலாச்சாரத்தை ரசித்து மகிழ்வோம். ஆஸ்திரேலியா உடன் விளையாடுவது எப்போதுமே சவால் நிறைந்த கடினமான போட்டி தொடராகும். இங்குள்ள மக்களின் ரசனை மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களின் போட்டித் திறன் எப்போதுமே சவால் அளிக்கும்.

இதையும் படிங்க:303 ரன்.. பாபர் இடத்தில் கம்ரன் குலாம் அசத்தல்.. ஜிம்பாப்வேவை வென்று பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

இதற்கு முன்னர் விளையாடிய போதும் சரி, தற்போது நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சரி சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் அதை தொடர விரும்புகிறோம். இங்கு இருக்கும் இந்திய ரசிகர்களை நாங்கள் நிச்சயமாக மகிழ்விப்போம். இது ஒருபோதும் எளிதானது அல்ல நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறோம் கிரிக்கெட் தொடரையும் ரசிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -