இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஆதர்டன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணி சிறப்பான வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடாத காரணத்தினால் அவருக்கு பதிலாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக பதவி வகித்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் அவுட் ஆகினாலும் பும்ரா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக இந்த போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஆதர்டன் பும்ராவின் புதிய பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் இருப்பது நிம்மதி அளிப்பதாக கூறி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நிம்மதியாக உள்ளது – மைக்கேல் ஆதர்டன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று நினைக்கிறேன். அவர் புதிய பந்தில் அற்புதமான பந்துவீச்சாளராக இருக்கிறார். அதாவது நீங்கள் ஓய்வு பெறும் போது சில பந்துவீச்சாளர்கள் உங்கள் நினைவுக்கு வருவார்கள்.நான் நினைக்கும் பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறார். நல்ல வேலையாக நான் விளையாடும் போது அவரை புதிய பந்தில் எதிர்கொள்ளவில்லை. அதாவது அவரை புதிய பந்தில் எப்படி விளையாடுவது என்று யோசிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
இதையும் படிங்க:என் வேலை ரன் அடிக்கிறது.. ஆஸி முன்னாள் கோச் இஷ்டத்துக்கு பேசட்டும் – ஜோ ரூட் கோபம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? அல்லது ஆஸ்திரேலியா தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.






