ராஜஸ்தான் வாங்கிய 13 வயது வீரர்.. ஐபிஎல் வரலாற்றில் அதிசயம்.. யார் இந்த வைபவ் சூர்யவன்சி?

0
235
Suryavanshi

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரை சேர்ந்த 13 வயது இந்தியா இளம் வீரரை 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

2024 ஐ பி எல் மெகா ஏலம் மிகவும் விறுவிறுப்பாக தற்போது சென்று கொண்டிருக்கிறது. கடைசி நேரத்தில் கையில் இருக்கும் குறைந்த தொகையை வைத்துதேவையான சில இடங்களுக்கு சரியான வீரர்களை வாங்குவதற்கு அணிகள் பொறுமையாக காத்திருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பாரம்பரியம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே இளம் ரியான் பாராக்கை வாங்கி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வளர்த்து தற்பொழுது இந்திய அணிக்கு அவர் தேர்வாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. ரியான் பராக் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கிரிக்கெட்டில் பின்தங்கிய பீகார் மாநிலத்தில் இருந்து 13 வயதான வைபவ் சூரியவன்சியை 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இவர் தற்போது நடைபெற்று முடிந்த யூத் டெஸ்டில் 58 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்திருந்தால். மேலும் பள்ளி கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை

இவர் பீகார் மாநில அணிக்கு ஐந்து முதல் தர போட்டிகளில் அறிமுகம் ஆகி விளையாடிவிட்டார். மேலும் அண்டர் 19 இந்திய பி அணியிலும் இருக்கிறார். இவரை இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரராக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆஸி நீங்க என்னென்ன சொன்னீங்க.. இத செய்யுங்க இல்லனா மறக்க முடியாததா ஆயிடும் – கங்குலி பேட்டி

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடன் போட்டியிட்டு இவரை 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கியதால், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தேர்வான வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். ராகுல் டிராவிட் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கை கொண்டு இருப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -