ஆஸ்திரேலியா அணி தங்களது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.
இந்த டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 150 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆனால் இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியால் 104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணி முதல் நாளில் 67 ரன் மட்டும் எடுத்து ஏழு விக்கெட்டை இழந்திருந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கையில் எடுத்த இந்திய அணி
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கேஎல்.ராகுல் 77, ஜெய்ஸ்வால் 161, விராட் கோலி 100* ரன்கள் எடுக்க இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் இலக்கு என்று நினைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 238 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு ஹெட் 89 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று முன்னிலை வகிக்கிறது.
முதல் நாள்தான் தோல்விக்கு காரணம்
இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசும்பொழுது “இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த போட்டிக்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராக இருந்ததாக உணர்ந்தோம். அனைவரும் சிறந்த முறையில் வெளிப்பட்டார்கள். விளையாட்டின் வழக்கத்தில் இதுவும் ஒரு போட்டி. நாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறவில்லை. ஒரு தோல்விக்கு பிறகு வேகமாக குதிரையில் ஏற விரும்புகிறீர்கள். ஆனால் நாங்கள் அப்படி செய்யப்போவதில்லை. இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு அடிலெயட் செல்ல போகிறோம்”
இதையும் படிங்க : 295 ரன்.. இந்தியா படைத்த புதிய வரலாறு.. ஆஸி அணிக்கு முதல் முறை நடந்த சோகம்.. பும்ரா தலைமையில் அபார வெற்றி
“நாங்கள் எதிர்பார்த்ததை எங்களுக்கு கொடுக்கவில்லை. சில மாறுபட்ட அம்சங்கள் இருந்தது. நாங்கள் முதல் நாளை மட்டும் கடந்து இருந்தால், இந்த போட்டியின் முடிவு வேறு விதமானதாக அமைந்திருக்கும். இந்த தோல்வியில் நிறைய உரையாடல்கள் இருக்கும். நாங்கள் வலை பயிற்சிக்கு செல்லும் பொழுது எங்கள் திட்டத்தில் என்ன மாற்ற வேண்டும் என்பது குறித்து நிறைய பேச வேண்டியது வரும்” என்று கூறியிருக்கிறார்.






