விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் சதம் அடிக்க வேண்டும் என தான் விரும்புவதாக ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் கூறியிருக்கிறார்.
இந்த மாதம் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதற்காக இந்திய அணி போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் பல்வகையான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.
விராட் கோலியால் உணர்வுபூர்வமான தொடராக மாறியது
விராட் கோலிக்கு இதுவே கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணமாக இருக்கும் என்று ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. இதன் காரணமாக தனிப்பட்ட முறையில் அவருக்கு மட்டும் அல்லாமல், ஆஸ்திரேலியா பக்கமும் விராட் கோலிக்காக உணர்வுபூர்வமாக மாறி இருப்பது மிகவும் வியப்பான ஒன்றாக இருக்கிறது.
காரணம் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடியவராக இருக்கிறார். பொதுவாக அவர்களுக்கு எதிராக அவர்களது மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக்கூடிய அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய மரியாதை கொடுப்பார்கள். மேலும் விராட் கோலி ஆஸ்திரேலியர்களை போல அவர்களிடமே ஆக்ரோஷமாக செயல்பட்டவர். 2014 ஆம் ஆண்டு ஜான்சன் மற்றும் விராட் கோலிக்கு களத்தில் நடந்த சம்பவங்களே சாட்சி.
விராட் கோலி டெஸ்ட் சதம் இங்கு அடிக்க வேண்டும்
இதுகுறித்து மிட்சல் ஜான்சன் கூறும் பொழுது “தற்பொழுது விராட் கோலிக்கு 36 வயதாகிறது. எனவே இதுவே அவருக்கு கடைசி ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணமாக இருக்கலாம். இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரியை விட ஆஸ்திரேலியாவில் அவருடைய பேட்டிங் சராசரி அதிகமாக இருக்கிறது. அவரது பார்ம் சில காலமாக சரியாக இல்லை. பெரிய இந்திய கூட்டத்தின் முன்னால் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தத்தில் இருப்பார்”
இதையும் படிங்க: நீங்க நம்ப மாட்டீங்க.. சிஎஸ்கேல தோனி இடத்துக்கு இவர்தான் சரியான ஆளு.. ட்ரை பண்ணுவாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
“சூழ்நிலை அவருக்கு சாதகத்தை கொடுக்குமா அல்லது கொடுக்காத என்பது குறித்து பார்க்க ஆச்சரியமாக இருக்கிறேன். இப்போது நான் ஒரு கிரிக்கெட் ரசிகனாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன். 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல நாங்கள் இப்பொழுது விளையாட்டு எதிரி கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






