ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்.. மும்பை இந்தியன்ஸ் வீரர் அபார சாதனை.. ரஞ்சி டிராபியில் 3வது வீரராக வரலாறு

0
287
Kamboj

நடப்பு ரஞ்சி சீசனில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ரஞ்சி டிராபியில் மூன்றாவது வீரராக அரிய சாதனை படைத்திருக்கிறார். மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஞ்சி டிராபியில் எலைட் சி பிரிவில் ஹரியானா மற்றும் கேரளா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரள அணி 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் கேரளா அணியின் 10 விக்கெட்டுகளையும் ஒரே பந்துவீச்சாளர் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் வீரர்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 23 வயதான ஹரியானாவை சேர்ந்த அன்சுல் காம்போஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய அளவில் நம்பிக்கை தரும் விதமாக சிறப்பான முறையில் பந்து வீசினார்.

இத்துடன் தற்போது வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கு ஓமன் நாட்டில் நடைபெற்ற எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் அன்சுல் காம்போஜ் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இந்திய ஏ அணிக்கு இருந்தார். மேலும் இந்த தொடரிலும் இவருடைய பந்துவீச்சு கவனத்தை ஈர்க்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அன் கேப்டு வீரரான இவரை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரஞ்சி டிராபியில் மெகா சாதனை

கேரள அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அன்சுல் காம்போஜ் ஹரியானா அணிக்காக மொத்தம் முப்பது புள்ளி ஒன்று ஓவர் பந்துவீசி 9 மெய்டன்கள் செய்து 49 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். இவர் ஒரு ஓவருக்கு 1.62 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முக்கியமான பட்டியலில் இணைந்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஷமியின் விஷயத்துக்காக வெட்கப்பட வேண்டாம்.. பும்ராவும் இதை செய்ய முடியாது.. பசங்க இருக்காங்க – முன்னாள் பவுலிங் கோச் பேட்டி

ரஞ்சி டிராபி வரலாற்றில் 1956-57ஆம் ஆண்டு சீசனில் அசாம் அணிக்கு எதிராக பெங்கால் வீரர் பிரேமன்சு சட்டர்ஜி முதல்முறையாக 10 விக்கெட் ஒரு இன்னிங்ஸில் கைப்பற்றி சாதனை படைத்தார். இவருக்கு அடுத்து 1985-86ஆம் ஆண்டு விதர்பா அணிக்கு எதிராக பிரதீப் சுந்தரம் இரண்டாவது வீரராக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் கைப்பற்றி இருந்தார். தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க பட்டியலில் அன்சுல் காம்போஜ் மூன்றாவது வீரராக இணைந்திருக்கிறார்!

- Advertisement -