தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இதற்கு தயாராக பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஈடுபட்ட சிமுலேஷன் பயிற்சியில் இந்திய வீரர்கள் காயம் அடைந்தும் கவலை அளிக்கும் விதத்தில் பேட்டிங் செய்தும் இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி விளையாடுகிறது. இதன் காரணமாக முன்கூட்டியே சென்ற இந்திய அணி தற்பொழுது பெர்த் மைதானத்தில் முகாமிட்டுபயிற்சி செய்து வருகிறது.
சிமுலேஷன் மற்றும் விசுவலேஷன் பயிற்சிகள்
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய ஏ அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. அதற்கு முன்பாக சாதாரண முறையில் சிமுலேஷன் பயிற்சி போட்டியிலும் விளையாடுகிறது.
மேலும் மைதானத்தின் நடு ஆடுகளத்தில் இருந்து விளையாடி போட்டி நாளுக்கு தயாராவதற்காக விசுவலேஷன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இப்படியான பயிற்சியில் நேற்று கேஎல்.ராகுல் காயம் அடைந்து உடனடியாக களத்தை விட்டு வெளியேறியிருக்கிறார் என்கின்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சர்பராஸ் கான் முழங்கையில் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் மர்ம காயம்
இந்த நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் காயத்திற்காக ஸ்கேன் செய்திருக்கிறார் என்கின்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்திருக்கிறது. அதே சமயத்தில் அவர் என்ன மாதிரியான காயத்திற்கு ஸ்கேன் செய்திருக்கிறார் என்கின்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இந்திய அணியுடன் அவர் சிமுலேஷன் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட்.. நியூஸி அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் ரிட்டயர்மென்ட்.. இந்திய அணிக்கு நெருக்கடி தரும் தொடர்
நேற்றைய பயிற்சியில் விராட் கோலி, கில், ஜெய்ஸ்வால், ஜூரல் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே பயிற்சியின் போது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து சீக்கிரத்தில் ஆட்டம் மிகுந்த விஷயம் இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. பெர்த் மைதானத்தின் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அட்ஜஸ்ட் ஆகவில்லை என்பது தெரிகிறது. எனவே முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இதற்குப் பயிற்சியின் மூலம் தயாராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!






