பெரிய கார் விமானம் எல்லாம் கிடைக்காது.. ஆஸி தொடருக்கு முன்ன ரோகித் விராட் இதை செய்யணும் – முகமது கைஃப் வலியுறுத்தல்

0
105
Kaif

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரஞ்சி டிராபியில் ஒரு போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

இந்திய அணி இந்த மாதம் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்திய நட்சத்திர வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கின்ற காரணத்தினால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கும் முன்பாக ரஞ்சி டிராபியில் ஒரு போட்டியாவது விளையாட வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

- Advertisement -

விராட் கோலி ரோகித் சர்மாவின் தடுமாற்றம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முழுமையாக உள்நாட்டில் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் இருக்கிறது. இவர்கள் இருவரும் கடந்த 10 இன்னிங்ஸ்களில் சேர்த்து 200 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “நிச்சயமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பேட்டிங் ஃபார்ம் தேவைப்படுகிறது. அவர்கள் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக இந்தியாவிலேயே சதம் அடித்தால் அது அவர்களுடைய தன் நம்பிக்கையை மிகவும் அதிகரிக்கும். அதனால் அவர்கள் ரன்கள் எடுப்பதற்கு தாங்கள் போராடவில்லை என்பதை நம்புவார்கள்”

- Advertisement -

2021 ரிஷப் பண்ட் நல்ல உதாரணம்

“அவர்களுக்கு போதுமான நேரம் தேவை. மேலும் 100% இவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வரும் பொழுதுபெரிய கார்கள் மற்றும் வசதியான விமானம் போன்றவை கிடைக்காது. ஆனால் நீங்கள் உங்களுடைய பேட்டிங் ஃபார்மை கண்டுபிடிக்க விரும்பினால் இதைத்தான் செய்தாக வேண்டும்”

இதையும் படிங்க: விராட் ரோஹித்தை நினைச்சா.. நம்பிக்கையாவும் பயமாவும் இருக்கு.. அதுக்கு காரணமே இந்த விஷயம் தான் – மைக்கேல் வாகன் கருத்து

“2021 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரின் போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாட சென்றார். திடீரென சகாவுக்கு பதிலாக அவர் டெஸ்ட் போட்டியில் களம் இறக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாக அவர் ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியில் விளையாடி சதம் அடித்திருந்தார். இதுதான் அவர் காபாவில் போட்டியை வெல்வதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது. எனவே பயிற்சி போட்டிகள் மிகவும் அவசியம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -