ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் 28 வருடங்களுக்குப் பிறகு மிக முக்கியமான நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறது. இதில் பங்கு பெறும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளும் கிரிக்கெட்டுக்கு போதிய வசதிகள் இல்லாத போதிலும் கூட, சுய ஆர்வம் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு காரணமாக தங்களை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் சென்று வந்திருக்கின்றன.
வெள்ளைப் பந்து தொடர்கள்
ஆப்கானிஸ்தான் அணி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறும் டி தொட்டி தொடரின் முதல் மூன்று போட்டிகள் டிசம்பர் 9,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15,17,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
28 வருடங்களில் முதல் முறை
தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மறுநாள் டிசம்பர் 26 பாக்ஸிங் டே டெஸ்டில் இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன. இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியது. இதைத்தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : தக்கவைக்கும் 5 வீரர்கள் பெயர்கள்.. சிஎஸ்கே வெளியிட்ட சூசக பதிவு.. கண்டுபிடித்த ரசிகர்கள்.. ஐபிஎல் 2025
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து நடத்துகிறது. இதன் மூலம் முதல் முறையாக ஜிம்பாப்வே கிரிக்கெட் புத்தாண்டு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






