தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி வலிமையான நிலையில் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்று தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையும் வகிக்கிறது.
இரட்டை சத பார்ட்னர்ஷிப்
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் எய்டன் மார்க்ரம் 55 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.
இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 342 பந்துகளில் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்டப்ஸ் சதம் அடித்து 198 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டோனி டி சோர்சி ஆட்டம் இழக்காமல் 211 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இன்று முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருக்கிறது. கேப்டன் தைஜூல் இஸ்லாம் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் தென் ஆப்பிரிக்க அணி
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், சொந்த நாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட இரண்டு டெஸ்ட் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டியில் நான்கை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கங்குலிக்கு அது புடிச்சுதா இல்லையானு தெரில.. ஆனா நான்தான் பிளான் பண்ணாம அப்படி செஞ்சேன் – எம்எஸ் தோனி பேட்டி
தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று விட்டால் மீதம் 4 போட்டிகளில் உள்நாட்டில் இருக்கிறது. உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை வெல்வது மிகவும் கடினம். மேலும் மோதக்கூடிய அணிகள் இலங்கை பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்த ஆறு டெஸ்ட் போட்டியில் நான்கை வெல்ல வேண்டி இருக்கிறது. அதில் ஐந்து டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாலில் விளையாடுகிறது. எனவே தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு கடும் சவாலை கொடுக்கிறது!






