இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியை தோற்று இருக்கிறது. இது தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.
மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று அணிகளுக்கான வாய்ப்பு
தென் ஆப்பிரிக்கா அணி பங்களாதேஸ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை வெளியிலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உள்நாட்டிலும் விளையாடுகிறது. இதில் 5 போட்டிகளில் நான்கு போட்டிகளை சவுத் ஆப்பிரிக்கா வென்றால உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் மற்றும் உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இந்த நான்கு டெஸ்ட் போட்டியில் மூன்று டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வென்றால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் வந்து விடுகிறது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. அந்த நான்கு டெஸ்ட் போட்டியையும் வெல்லும் பட்சத்தில் நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சண்டையில் இறங்கும்.
ஆஸ்திரேலியா இந்திய அணிக்கான வாய்ப்பு
ஆஸ்திரேலியா அணிக்கு உள்நாட்டில் இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் வெளிநாட்டில் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் என ஏழு டெஸ்ட் இருக்கிறது. இதில் அந்த அணி நான்கு டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும்.
இதையும் படிங்க : இந்திய அணி எதிர்பார்த்ததை விட அதை செஞ்சது.. நல்லவேளை இங்க தப்பினோம் – டாம் லாதம் பேச்சு
இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒன்று, வெளிநாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆறு டெஸ்ட் போட்டியில் நான்கு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து இருக்கிறது!






