கம்பீர் வந்ததும் வாசிங்டன் சுந்தருக்கு ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா.. அவருக்கான மெசேஜ் இதுதான் – ஸ்ரீராம் பேட்டி

0
192
Sriram

இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு எவ்வாறு கவனம் செலுத்தப்படுகிறது என்பது குறித்து தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு புதிதாக அழைக்கப்பட்டிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இத்துடன் உள்ளே வந்த அவர் 59 ரன்கள் தந்து 7 விக்கெட் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

கம்பீர் செய்யும் ஆச்சரியமான வேலைகள்

கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ந்து எல்லா அணிகளிலுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக வாஷிங்டன் சுந்தர் காயத்தின் காரணமாக உள்ளே வெளியே என தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறும்பொழுது ” நீங்கள் சரியாக கவனித்தால் கம்பீர் பயிற்சியாளர் பதவிக்கு வந்த பிறகு, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவதை பார்க்க முடியும். வாஷிங்டன் சுந்தருக்கு குறைவான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக கம்பீர் நினைத்தார்.ஆனால் அவரால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என கம்பீர் நம்பினார்”

- Advertisement -

வாஷிங்டன் சுந்தருக்கு என் மெசேஜ் இதுதான்

“இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் பங்கு என்ன என்பதை காலப்போக்கில் அவரும் நாமும் சேர்ந்து கண்டுபிடிப்போம் என்று நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆட்டம் செல்லும் போக்கில் எல்லாவற்றிலும் சிறந்த பங்களிப்பை கொடுக்கக்கூடிய ஒரு வீரர்”

இதையும் படிங்க : ரோஹித் அது ஒரு சாதாரண பந்து.. நீங்களே இந்த புள்ளி விபரத்தை பாருங்க – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

“ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவர் என்னிடம் தனது பந்துவீச்சில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது ஓவர் ஸ்பின் பந்துவீச்சில் கவனம் செலுத்துமாறு கூறினேன். பின்பு அதில் அவர் வேலை செய்தார். இப்போதும் நான் அவருக்கு அதையே கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -