கம்பீர் பாய் கண்ணில் பட கூடாதுனு இருந்தேன்.. ஆனா அவர் அப்படி செஞ்சத பார்த்தப்போ சந்தோசமா இருந்துச்சு – சாம்சன் பேட்டி

0
102

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற முடிந்த மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு நிரூபித்தார்.

இந்த சூழ்நிலையில் கம்பீருருக்கும் அவருக்கும் இடையேயான பிணைப்பு குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங்கில் சொதப்பிய சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் அதிரடி வீரராக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வந்தாலும் இந்திய அணியில் அவ்வப்போதும் வருவதும் போவதுமாக இருந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணியில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அணி டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை.

இருப்பினும் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்களில் வெளியேற அடுத்த போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது போட்டியில் களமிறங்கி தன் மீதான விமர்சனங்களை துடைத்தெறிந்து அந்த போட்டியில் அபார சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். இந்த சூழ்நிலையில் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறிய போது கம்பீரை பார்ப்பதை தவிர்த்ததாகவும் சதம் அடித்த பிறகு அவர் தனக்காக கைதட்டியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

கண்களில் படுவதை தவிர்த்தேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு அணி வீரர் தனது பயிற்சியாளர் உடனான உறவு என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் பயிற்சியாளரின் ஆதரவை பெறும் போது அவரது நம்பிக்கையை உங்களது செயல்திறன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள். எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்காகவும் நான் அவரை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே நான் ஆரம்பத்தில் ஒற்றைப்படை ரன்களில் வெளியேறிய போது அவரது கண்களில் படுவதை தவிர்க்க முயற்சித்தேன்.

இதையும் படிங்க: 283 ரன்.. போட்டியை மாற்றிய பங்களாதேஷ் மெஹதி ஹசன்.. தென் ஆப்பிரிக்க அணி வெல்லுமா? – சுவாரசிய நிலையில் முதல் டெஸ்ட்

மேலும் எனது வாய்ப்புக்காக காத்திருந்து நான் மூன்றாவது போட்டியில் சதம் அடித்தபோது கௌதம் கம்பீர் பாய் எனக்காக கைதட்டிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது” என்று தனது மகிழ்ச்சியை சாம்சன் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது திறமையை சாம்சன் நிரூபித்திருக்கும் நிலையில் இனி இந்திய அணியில் தொடர்ச்சியாக இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -