இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை ஐந்தாவது நாள் போட்டிக்கான வானிலை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தற்போது நியூசிலாந்து அணியின் கைவசம் 10 விக்கெட் இருக்க அந்த அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் தேவையாக இருக்கிறது. இந்த போட்டியில் எல்லா நாளுமே மழையின் தாக்கம் இருந்ததால் நாளையும் மழை இருக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது.
மழைக்கு நடுவே தெரிந்த முடிவு
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆக, இதற்கடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு 402 ரன்கள் குவித்தது. இந்திய அணி 356 ரன்கள் முதல் இன்னிங்சில் பின்தங்கியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று 466 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் தற்பொழுது டார்கெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நியூசிலாந்து இன்று தனது இரண்டாவது இன்னிங்சில் வெறும் நான்கு பந்துகளை சந்தித்து இருந்த பொழுது, வெளிச்சம் இல்லாத காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டது. இதற்கு அடுத்து உடனே கடும் மழை பெய்யத் தொடங்கியது.
நாளை ஐந்தாவது நாளுக்கான வானிலை அறிக்கை
இந்த போட்டியில் தற்பொழுது நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் மழையின் காரணமாக டிராவில் முடிவடையுமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை காலை முதல் செஷன் நடக்கும் பொழுது வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும், இதற்கு அடுத்து மதியம் ஒரு மணிக்கு மழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும், பிறகு அந்த மழை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒருவேளை நாளை போட்டி ஒரு மணி தொட்டால், மேற்கொண்டு போட்டி மழையால் நடக்காது என்று தெரிய வருகிறது.
இதையும் படிங்க : 466 ரன்.. 137 வருட வரலாற்றை இந்திய அணி மாற்றுமா.. 50 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி வெற்றி பெற்ற சம்பவம் நடந்திருக்கிறதா?
இந்த போட்டி டிராவில் முடிவடையுமா? இல்லை இந்திய அணி ஆச்சரியப்படுத்துமா? நியூசிலாந்து அணி வெல்லுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






