பாபர் அசாம் விஷயத்தில்.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செய்தது முட்டாள்தனமானது – மைக்கேல் வாகன் விமர்சனம்

0
282
Babar

இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சி இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்டது மிகவும் முட்டாள்தனமான முடிவு என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து வந்திருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக பாபர் அசாம் உட்பட ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இரண்டு டெஸ்டில் நீக்கப்பட்ட ஐந்து வீரர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து ஐந்து வீரர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக முடிவு எடுத்து பாபர் அசாம் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமத் மற்றும் அப்ரார் அகமத் என ஐந்து வீரர்களை நீக்கி இருக்கிறது. மேலும் இதற்கு பதிலாக புதிய ஐந்து வீரர்களை உள்வாங்கி இருக்கிறது. என்ன நடந்திருந்தாலும் பாபர் அசாம் போன்ற ஒரு பேட்ஸ்மேனை நீக்கி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. தற்போது இதில் இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

முழுக்க முட்டாள்தனமானது

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும், மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் பெரிய ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருப்பதாகவும் அவருடைய பாணியில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : நியூசிலாந்து டெஸ்ட்.. அஸ்வின் உடைக்க காத்திருக்கும் 5 மெகா ரெக்கார்டுகள்.. சில தனித்துவ சாதனைகள்

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “வெளிப்படையாக பாகிஸ்தான் சிறிது காலமாக வெற்றி பெறாமல் இருந்து வருகிறது. தற்போதைய தொடரில் முதல் போட்டியை தோற்று இருக்கிறது. இதன் காரணமாக தங்கள் அணியின் சிறந்த வீரரை அவர்கள் நீக்கி இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் ஆச்சரியங்கள் நிறைந்தது என்று நான் நினைக்கிறேன். இருந்தபோதிலும் இது முட்டாள்தனமானது, முற்றிலும் முட்டாள்தனமானது. பாபர் அசாம் ஓய்வு கேட்கவில்லை என்றால் இது அப்படியானதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -