பிசிசிஐ அறிவித்த இந்திய அணியால்.. ஆர்சிபி-க்கு அடித்த ஜாக்பாட்.. வினோத லக் – முழு விபரங்கள்

0
265
RCB

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் எதிர்பாராத விதமாக ஆர்சிபி அணிக்கு ஒரு பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த வாரங்களில் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக இரண்டு அன் கேப்ட் வீரர்கள் உடன், மொத்தம் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என ஒவ்வொருதக்க வைப்புக்குமான தொகையையும் வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

நியூசிலாந்து டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு

இந்த நிலையில் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆர் சி பி அணிக்காக விளையாடும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் யாஸ் தயால் சேர்க்கப்படவில்லை. கடந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பை பெறவில்லை.

அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் லக்னோ அணிக்காக விளையாடும் மயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டார்கள். மேலும் கொல்கத்தா அணிக்காக விளையாடும் ஹர்ஷித் ராணா இன்று அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி இந்திய அணிக்கு அறிமுகம் ஆகிவிட்டால் இவர்களை நான்கு கோடி ரூபாய்க்கு ஐபிஎல் அணி நிர்வாகங்களால் தக்க வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு அடித்த லக்

இப்படியான சூழ்நிலையில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் யாஸ் தயால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் அவர் இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. மேலும் அவரது பெயர் ரிசர்வ் வீரர் இடத்திலும் இல்லை.

இதையும் படிங்க : ரோகித் சர்மா பத்தின அந்த விஷயம் உண்மைதான்.. இது நடந்தா இந்திய அணிக்கு பெரிய அடி – ஆகாஷ் சோப்ரா பேட்டி

எனவே ஆர்சிபி அணி வெறும் 4 கோடி ரூபாய்க்கு யார் தயாளை அன் கேப்ட்டு வீரராக தக்க வைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஹைதராபாத் மற்றும் லக்னோ என ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்காத தக்கவைப்பு வாய்ப்பு ஆர்சிபி அணிக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -