கம்பீர் சொன்னது சரிதான்.. ஆனா சஞ்சு சாம்சனை இதனால நீக்கிடுவாங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
35
Sanju

தற்போது இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் சஞ்சு சாம்சனை நீக்கவும் வாய்ப்புகள் உண்டு என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

மத்திய பிரதேஷ் குவாலியர் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த சஞ்சு சாம்சன் 19 பந்துகள் விளையாடி 29 ரன்கள் எடுத்தார். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவறான முறையில் பந்தை தேர்ந்தெடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகத்தின் புத்திசாலித்தனம்

தற்போது பங்களாதேஷ் டி20 தொடரை இரண்டு முக்கியமான காரணங்களுக்காக இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்திய அணிக்கு மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் வேண்டுமென்றால் அது இடதுகை சுழல் பந்து வீசக்கூடிய அபிஷேக் சர்மாவா? அல்லது ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருக்கும் சஞ்சு சாம்சானா? என்ற முடிவுக்கு வர முயற்சி செய்கிறது.

சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட் கீப்பராக ஏற்கனவே 15 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் இருந்து வருகிறார். இவர் துவக்க இடத்தில் சிறப்பாக விளையாடினால், இவரையே கில் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக 15 பேர் கொண்ட அணியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை இணைத்துக் கொள்ள முடியும். ஒருவேளை இவர் சரியாக விளையாடாவிட்டால், பந்து வீசவும் செய்யக்கூடிய துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மாவை இணைத்துக் கொள்வார்கள்.

- Advertisement -

கம்பீர் சொன்னது சரிதான்

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் நல்ல முறையில் 29 ரன்கள் எடுத்தார். அவர் இந்த இடத்திற்கு வந்து விட்டதால் இன்னும் முன்னேறி ரன்கள் எடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரை நீக்கி விடுவார்கள்.அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் மேலும் பேட்டிங் வரிசையில் கீழ் மேல் என நகர்ந்து கொண்டே இருக்கிறார்”

இதையும் படிங்க : அஸ்வினுக்காக பயந்து.. ஹெட்டை இப்படி பண்ணிடாதீங்க.. பும்ரா சிராஜ் அடிபணிய மாட்டாங்க – ஆஸி இயான் சேப்பல் கருத்து

“அவர் பேட்டிங் செய்த விதத்தை குறிப்பிட வேண்டும் என்றால் அற்புதமாக பேட்டிங் செய்தார். பந்தை மிக கடினமாக அடித்து விளையாட அவர் முயற்சி செய்யவில்லை. அழகாக பந்தை டைமிங்கில் தட்டி விளையாடி ரன்கள் எடுத்தார். கம்பீர் சொன்னது போல அவரை விளையாடாவிட்டால் இந்திய அணிக்குதான் நஷ்டம். அவர் பந்தை காயப்படுத்த விரும்பாமல் ஒன்றன்பின் ஒன்றாக பவுண்டரிகள் அடித்தார். ஆனாலும் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -