எங்களுக்கு உண்மையாவே டி20ல 180 ரன் அடிக்க தெரியல.. அதுக்கான காரணம் இதுதான் – பங்களாதேஷ் கேப்டன் ஒப்புதல்

0
26
Shanto

பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ தங்களுடைய அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 180 ரன்கள் எடுப்பது எப்படி என தெரியவில்லை எனவும் அதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

நேற்று இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி அதிரடியாக ஆரம்பிப்பது போல் ஆரம்பித்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அவர்களுக்கு பாசிட்டிவ் ஆக விளையாட வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும் கூட, அதை எப்படி விக்கெட்டை காப்பாற்றி விளையாடுவது என்று தெரியவில்லை என்பது தெரிந்தது.

- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு நீண்ட நாள் பிரச்சனை

பங்களாதேஷ் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஓரளவுக்கு சிறப்பாகவேவந்திருக்கிறது. கடந்த வருடத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை போய் வென்று வந்தது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் வென்றது.

இப்படி இருக்கும் பொழுது டி20 கிரிக்கெட் வடிவத்தில் பங்களாதேஷ் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. அவர்களுக்கு மிடில் ஆர்டரில் பந்தை நல்ல முறையில் தாக்கி விளையாட கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை. மேலும் டாப் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன் இருந்தாலும் அவர்கள் நிலைத்து நின்று அதிரடியை வெளிப்படுத்துவது இல்லை. எனவே பங்களாதேஷ் டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமான முறையில் இருந்து வருகிறது.

- Advertisement -

எங்களுக்கு 180 ரன்கள் எடுக்கத் தெரியவில்லை

இது குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசும்பொழுது “எங்களிடம் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் அந்த திறமையை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 10 வருடங்களாகவே நாங்கள் இப்படித்தான் பேட்டிங் செய்து வருகிறோம். சில சமயம் நாம் நம்முடைய அணுகு முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். நாங்கள் எங்களுடைய சொந்த நாட்டில் டி20 கிரிக்கெட்டில் 140 முதல் 150 ரன்கள் எடுக்கும் விக்கெட்டில் விளையாடுகிறோம். இதன் காரணமாக எங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் 180 ரன்கள் எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. இது ஒரு காரணமாக இருக்கலாம்”

இதையும் படிங்க : தோனிக்காக கொண்டு வந்த விதிதான்.. ஆனா அதை இப்படி மாத்தினா மட்டுமே ஐபிஎல்-க்கு நல்லது – டாம் மூடி கருத்து

“நாங்கள் இப்போது விளையாடுவதை விட சிறந்த அணி. ஆனால் இந்த வடிவத்தில் நாங்கள் நீண்ட காலமாக சிறப்பாக செயல்படவில்லை. இருந்த போதும் நாங்கள் மோசமான அணி என்று நம்பவோ கூறவோ நான் விரும்பவில்லை. மேலும் தனிப்பட்ட எந்த ஒரு வீரரையும் பற்றி நான் பேசவில்லை. நாம் ஆக்ரோஷமாக விளையாடுவதில் சரியான பந்தை தேர்வு செய்து விளையாட வேண்டும். அதே சமயத்தில் நம்முடைய ஆக்ரோஷ அணுகுமுறையில் எந்த அவசரத்தையும் காட்ட வேண்டியது இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -