144 ரன் 10 விக்கெட்.. 2வது நாளிலே தோல்வியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்.. திரும்பி வந்த தென் ஆப்பிரிக்கா அணி

0
553

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட தற்போது 239 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருப்பதால் இந்தப் போட்டி தற்போது தென்னாப்பிரிக்காவின் பக்கமே சாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதில் முதல் இன்னிங்ஸ் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்திருந்தது. அதற்குப் பிறகு துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 144 ரன்கள் சேர்ப்பதற்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோல்டர் மட்டுமே அதிகபட்சமாக ஓரளவு நன்றாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக மல்டர் நான்கு விக்கட்டுகளும், பர்கர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் 16 ரன்கள் முன்னிலையோடு தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிசை துவங்கியது. இந்த முறை சற்று சுதாரித்த தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடிய முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் குவித்தது. டோனி டி சார்ஜி 39 ரன்களில் வெளியேற, தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 51 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு கேப்டன் பவுமா நான்கு ரன்களில் வெளியேற, பெடிங்காம் டக் அவுட் ஆனார். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் வெரின் மற்றும் மல்டர் ஆகியோர் சிறப்பாக விளையாடி களத்தில் இருக்கின்றனர். வெரின் 50 ரன்கள் மல்டர் 34 ரன்கள் குவித்து களத்தில் இருந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க:விராட் ரோஹித் இல்லை.. இவர்தான் இந்தியாவின் உலகத்தரமான வீரர்.. ஆனா யாரும் அவரை பத்தி பெருசா பேச மாட்டேங்கிறாங்க – பென் டக்கட் கருத்து

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சீல்ஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இன்னும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் தற்போது 239 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -