கம்பீர் அந்த ஒரு இந்திய வீரர் இலங்கைக்கு போதும்.. வித்தைய மிஸ் பண்ணிட்டிங்க – சல்மான் பட் விமர்சனம்

0
626
Salman

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய அணி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஒருநாள் தொடரில் இந்திய அணி என்ன தவறு செய்தது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இப்படியே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இரண்டுக்கு பூஜ்ஜியம் என இந்திய அணி தோற்று இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும்பொழுது “சுழல் பந்துவீச்சுக்கு எதிராக எப்படி விளையாடுவது என்று இந்திய அணி யோசிக்க வேண்டும். அவர்கள் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதற்கு மறு வியூகத்தை வகுக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் இதில் சிறந்தவர்கள்

அதே சமயத்தில் சமீப காலமாக அவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் பின் தங்கி இருக்கிறார்கள். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஒருநாள் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடுவது பற்றி யோசித்திருக்க வேண்டும். சூரியகுமார் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பான ஆதிக்கம் செலுத்தினார். அவரது ஸ்வீப் ஷாட் மிகவும் வலிமையானது.

- Advertisement -

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. சூரியகுமார் யாதவ் போல இந்த ஷாட்டை இந்திய அணியில் வேறு யாரும் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே இந்த தொடரில் சூரியகுமார் யாதவை விளையாட வைக்காமல் இந்திய அணி ஒரு வித்தையை தவற விட்டு விட்டது. மேலும் இலங்கை சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்து வீசினார்கள்.

இலங்கை அணியினர் உலக சாம்பியனை வீழ்த்தி இருக்கிறார்கள், அவர்கள் எல்லா வகையிலும் உலக சாம்பியனை வீழ்த்தியிருக்கிறார்கள். இந்தத் தோல்வி இந்திய அணிக்கு ஒரு நல்ல விழிப்பாக இருக்கும். இந்திய அணியினர் இந்த சுற்றுப்பயணத்திற்கு வரும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வந்தார்கள். தற்பொழுது அவர்கள் செல்லும் பொழுது யோசிப்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.

இதையும் படிங்க : நான் 40 ஓவர் பத்தி யோசிச்சேன்.. இலங்கை பேட்டிங்கில வித்தியாசமா இதை செஞ்சாங்க – ரோகித் சர்மா தெளிவான பதில்

புதிய பயிற்சியாளர் கம்பீர் சில விஷயங்களை யோசிக்க வேண்டும். குறிப்பாக அவர் யாரை எங்கே விளையாட வைக்க வேண்டும் என்று சரியான முடிவை எடுக்க வேண்டும். மேலும் இந்த மிடில் ஆர்டர் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக பெரிய பாதிப்படைய கூடியதாகத் தெரிகிறது. எனவே பயிற்சியில் இதை சரி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -