இந்திய அணி நேற்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனத்தை இந்திய வீரர்கள் மீது வைத்திருக்கிறார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது போட்டியில் விளையாடியது. இந்த தொடரில் முதல் போட்டி டை ஆகியிருந்த காரணத்தினால் மேற்கொண்டு இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்கின்ற நெருக்கடியில் இந்திய அணி இருந்தது.
இப்படியான நிலையில் இலங்கையணி முதலில் பேட்டிங் செய்தது 240 ரன்கள் எடுக்க. இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து முன்னேறியது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா 44 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, மேற்கொண்டு இந்திய அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்து 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி வெல்ல முடியாத படி செய்துவிட்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது ” உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இரண்டு முறை எல்பிடபிள்யு ஆவதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் சிவம் துபே இருவருக்கும் இப்படி நடந்தால் அதை புரிந்து கொள்ள முடியும். விராட் கோலி பயிற்சி செய்யவில்லை என்று தெரிகிறது.
இந்த பேட்டிங் வரிசை உலகை ஆளும் பேட்டிங் வரிசை என்பது போல தெரியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் பயிற்சி கூட செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். இவர்கள் இந்தியாவில் இருந்து எந்த பயிற்சியும் இல்லாமல் நேராக இலங்கை வந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : எல்பிடபிள்யூ சர்ச்சை.. உண்மை என்னன்னு கோலிக்கு நல்லா தெரியும்.. நடந்தது இதுதான்.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
இந்திய அணியில் ரிஷப் பண்ட், ரியான் பராக் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வேலை வந்து விட்டதாக நான் நினைக்கிறேன். இந்தியாவில் உள்நாட்டில் 50 ஓவர் வடிவத்தில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகள் கம்பீருக்கு முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அங்கிருந்து சில நல்ல வீரர்களை அவர் தொடர்ந்து அழைத்துச் செல்ல வேண்டும். வீரர்களின் பெயர்களுக்காக அவர்களை அணியில் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியாது” என்று கூறி இருக்கிறார்.






