இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லிகேலேவில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளரும், சிஎஸ்கேவின் முக்கிய பந்துவீச்சாளருமான தீக்ஷனா தனது பந்து வீச்சு முன்னேற்றத்திற்கு தோனி எப்படி உதவியாக இருக்கிறார் என்பதை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கு பெற உள்ளது. இதன் முதல் டி20 இன்று நடைபெற உள்ள நிலையில் புதிய கேப்டனான சூரிய குமார் யாதவின் தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்க இருக்கிறது.
இலங்கை அணிக்கும் டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்று இலங்கை அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புத்துணர்வோடு இந்த டி20 போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் இலங்கை அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடர்களில் ஏற்கனவே விளையாடி அனுபவம் பெற்றவர்கள்.
குறிப்பாக இலங்கை அணியின் தீக்சானா மற்றும் பத்திரானா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியவர்கள். தோனியின் பட்டறையில் மெருகேறியவர்கள் என்பதால் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற யுத்தியை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இந்த நிலையில் சிஎஸ்கேவின் முக்கிய சுழற் பந்துவீச்சாளரான தீக்சானா தோனி தனது பந்துவீச்சில் உதவிய விதம் குறித்து கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “மகேந்திர சிங் தோனியிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட்களை பயன்படுத்தி விளையாடும் போது பந்துவீச்சில் எனக்கு நிறைய உதவி இருக்கிறார். என்னுடைய ஆக்ஷனில் நான் பந்தை வேகமாக வீசுவேன். ஆனால் பேட்ஸ்மென்கள் அதனை பயன்படுத்தி பௌண்டரிகளை அடிப்பார்கள். அப்போது தோனி புல்லர் லெந்தில் பந்தை வீச சொல்வார்.
இதையும் படிங்க:வெறும் 1 பந்து.. வாய்ப்பை நழுவ விட்ட பாகிஸ்தான்.. பைனலில் இந்தியா இலங்கை அணிகள்.. மகளிர் ஆசிய கோப்பை 2024
அப்படித்தான் நான் யார்க்கர் பந்துகளை படிப்படியாக வீச ஆரம்பித்தேன். டெத் ஓவர்களில் பந்து வீச படிப்படியான நம்பிக்கையை பெற்றேன். தோனிக்கு எப்போதுமே ஒரு திட்டம் இருக்கும். ஆனால் அவர் எப்போதுமே முதலில் பந்துவீச்சாளர்களின் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிப்பார். அந்தத் திட்டம் ஒத்துவரவில்லை என்றால் மட்டுமே தோனி உங்களை வழிநடத்துவார்” என்று கூறி இருக்கிறார்.






