எல்லாத்துக்கும் இவரைத்தான் குறை சொல்லுவாங்க.. 3 வருஷத்துல என்ன பண்ணி இருக்காருன்னு பாருங்க – அஸ்வின் பேட்டி

0
2273

டி20 உலக கோப்பையோடு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். அவருக்கு இந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்து இந்திய அணியினர் பிரியாவிடை அளித்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ராகுல் டிராவிட் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

ரவி சாஸ்திரியின் ஓய்விற்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற ராகுல் டிராவிட்டின் தலைமையில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை வந்து தோல்வி அடைத்தது.

- Advertisement -

ஒரு நாள் உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்த ராகுல் டிராவிட்டுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பவும் சமாதானப்படுத்தி டிராவிட்டை அழைத்து வந்திருக்கிறார். முந்தைய தொடர்களில் செய்த தவறை சரி செய்த இந்திய அணி இந்த முறை டி20 உலக கோபத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த மூன்று வருடங்களாக டிராவிட் இந்திய அணிக்காக என்ன செய்தார் என்பதையும், விராட் கோலி டிராவிட்டிடம் உலகக் கோப்பையை கொடுத்த போது எப்படி கதறி அழுதார் என்பதையும் ரவிச்சந்திரன் அஸ்வின் விவரித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விரிவாக கூறும்போது “என்னுடைய சிறப்பாக தருணமாக நான் எதை கூறுவேன் என்றால், விராட் கோலி ராகுல் டிராவிட்டை அழைத்து உலகக் கோப்பையை கையில் கொடுத்த தருணம்தான். அவர் உலகக் கோப்பையை கட்டிப்பிடித்து அழுவதை நான் பார்த்தேன். அவர் கதறி அழுத தருணம் என்னால் உணர முடிந்தது. நான் அதை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்து பார்த்தேன். நான் முக்கியமாக ஒருவரைப் பற்றி இங்கு பேசியாக வேண்டும். 2007ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறியது, அப்போது ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார்.

இதையும் படிங்க:2 ஓவர் 11 ரன்.. தமிழ்நாட்டு மலிங்கா பெரியசாமி தெறி பவுலிங்.. திரில் போட்டியில் சேப்பாக்கம் திருச்சி அணியை வென்றது

அதற்குப் பிறகு அவர் தனது கேப்டன் பதவியை விட்டு விலகினார். ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால் இந்திய அணி வெளியேறினால், ஏதேனும் ஒரு போட்டியை தோற்றால் உடனே ராகுல் டிராவிட்டை தான் குறை கூறுவார்கள். ராகுல் டிராவிட் என்ன செய்கிறார் என்று தான் கேட்கிறார்கள். கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக அவர் இந்திய அணிக்காக என்ன செய்கிறார் என்று தெரியும். அவர் எவ்வளவு சமநிலையுடன் இருக்கிறார் இந்த அணுகுமுறையை மாற்ற எவ்வாறு உழைத்தார் என அனைத்துமே தெரியும். வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் எதை எப்படி செய்யலாம்? எதை எப்படி மாற்றலாம் என அனைத்தையும் திட்டமிட்டு கொண்டிருப்பார்” என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -