நேற்று முதல் இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா இந்திய கிரிக்கெட்டின் பல சர்ச்சையான விஷயங்கள் குறித்து மிகத் தைரியமாக பேசி வருவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கில்லுக்கு கேப்டன் பதவி கொடுத்தது பற்றி தைரியமாக அதைத் தவறு என மறுத்து பேசி இருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரை விட சிறப்பான நிலையில் இருந்து வந்த ருதுராஜ் எதிர்கால இந்திய டி20 அணியின் பேக்கப் வீரராக மட்டுமே பார்க்கப்படுகிறார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் சுப்மன் கில் ஒரு துப்பு இல்லாத கேப்டன் என்றும், அவரை பின்னால் இருந்து ஆதரிக்க கூடிய ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், ருதுராஜ் கேப்டன் பொறுப்புக்கு சரியானவராக இருந்தாலும் கூட, அவருக்கு பின்னால் யாரும் இல்லை என்று அமித் மிஸ்ரா மிக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் நிச்சயம் இல்லை கேப்டன் ஆகியிருக்க மாட்டேன். நீங்கள் ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் கில்லுக்கு கேப்டனாக என்ன செய்வது? என்றே களத்தில் தெரியவில்லை. அவர் எந்தவிதமான துப்பும் இல்லாமல் களத்தில் நிற்கிறார். இந்திய அணியில் அவரிடம் பெறுகிறார் என்பதற்காகவே அவரை கேப்டனாக்க கூடாது. குஜராத் அணிக்கு கேப்டனாக தலைமைத்துவம் இல்லாததை பார்த்த பின்பும் கூட அவரை கேப்டனாக்க விரும்புகிறார்கள்.
இந்திய அணியை டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான் வழிநடத்த முடியும். ஆனால் பிசிசிஐ வெறுமனே வீரர்களுக்கு இருக்கும் மதிப்பை மட்டுமே பார்க்கிறது. டிராவிட் கில்லை ஆதரிக்கிறார். இங்கு எல்லோருக்குமே ஒவ்வொரு விருப்பங்கள் இருக்கிறது. நான் இல்லை வெறுக்கவில்லை, எனக்கும் அவரை பிடிக்கும்.
இதையும் படிங்க : 61 ரன் 2 ஓவரில் தேவை.. 1 பந்தை மிச்சம் வைத்து ஜெயித்த ஆஸ்திரியா.. அபூர்வ நிகழ்வு
ஆனாலும் கூட ருதுராஜ் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு கடினமான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை வழிநடத்தி இருக்கிறார். அவர்தான் இந்திய அணிக்கு சரியான வீரராக இருப்பார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி உடன் ஜெய்ஸ்வால் இருந்தது போல ருதுராஜ் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக்கூடியவர். முக்கியமாக விக்கெட் பற்றிய பயத்தை தராமல் அணிக்கு அமைதியை தரக்கூடியது யார்? ருதுராஜ் இந்த வேலையை சிறப்பாகச் செய்வார். ஆனால் அவர் தன்னை சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல மேனேஜரை வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்






