இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பொழுது. ரவி சாஸ்திரி பயிற்சி காலத்தில் இருந்த துணைப் பயிற்சியாளர் குழு முற்றிலும் கலைக்கப்பட்டது. புதிய துணை பயிற்சி குழுவில் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சி காலம் முடிவடைந்ததால், விக்ரம் ரத்தோருடைய பயிற்சி காலமும் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் ஒரு குறிப்பிட்ட இந்திய இளம் வீரர் குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணி கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய துணைப் பயிற்சியாளர் குழுவில் பழைய பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. மீதம் மொத்த துணை பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பரே ஆகியோர் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் குழுவில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இவர்களுடைய பயிற்சி காலத்தில் இந்திய கிரிக்கெட் நல்ல முறையில் வளர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய இளம் வீரர் ரிங்கு சிங் பற்றி விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “வலைப்பயிற்சியில் ரிங்கு சிங் பேட்டிங் செய்யும் பொழுது, அவரால் ஒரு டெஸ்ட் பேட்டராக உருவாக முடியாது என்பதற்கான தொழில்நுட்பத் அவர்கள் எதையுமே என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் ஒரு பயங்கரமான ஃபினிஷர் ஆக தன்னை நிரூபித்து இருக்கிறார் என்று தெரியும். ஆனால் அவருடைய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆவரேஜ் 50 இருக்கிறது. எனவே அவருக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை அவர் பயன்படுத்திக் கொள்வார்.
இதையும் படிங்க : நானும் சச்சினும் அவர் பக்கத்தில் கூட வர முடியாது.. நான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர்- லாரா புகழாரம்
மேலும் நான் பணியாற்றிய பயிற்சியாளர்களில் ராகுல் டிராவிட் மிகச் சிறந்தவர். அவர் நம் வேலை செய்வதற்கு இடம் கொடுப்பார். நம் ஆலோசனைகளை மனம் திறந்து கேட்பார். மேலும் அவரும் சரியான ஆலோசனைகளைக் கூறுவார். டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எங்களுடைய பேட்டிங் டெம்ப்ளேட்டை மாற்றி ஆக்ரோஷமாக விளையாட முடிவு செய்தோம். அது எங்களுக்கு பலன் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






