தம்பி வாஷிங்டன் சுந்தர்.. உனக்கு வாய்ப்பு தரும் நல்ல டீமை கண்டுபிடிச்சு சேரு – ஹர்ஷா போக்லே அட்வைஸ்

0
1148
Sundar

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தராத ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே விமர்சனம் செய்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் 11.62 ஆவரேஜில், ஓவருக்கு 5.16 ரன்கள் மட்டும் கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒரு ஓவருக்கு சிக்கனமாக பந்து வீசிய விதம் மற்றும் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தாலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய காரணத்தினால் தொடர் நாயகன் வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அதே சமயத்தில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 8 புள்ளி 75 கோடி ரூபாய்க்கு வாஷிங்டன் சுந்தர் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக அவருக்கு மொத்தம் ஒன்பது போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கடந்த சீசனில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதில் அவர் ஐந்து ஓவர்கள் பந்து வீசி 73 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். மேலும் பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 60 போட்டிகளில் 35.81 என்கின்ற சராசரியில், ஓவருக்கு 7.54 ரன்கள் கொடுத்து 37 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணிக்காக 48 டி20 போட்டிகளில் விளையாடி 25.26 சராசரியில், ஓவருக்கு 6.95 என்கின்ற சிக்கனமான எக்காணாமியில் 42 விக்கெட்டுகள் கைப்பற்றி தாக்கம் தரக்கூடிய சுழல் பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது வாஷிங்டன் சுந்தர் பற்றி ட்விட் செய்துள்ள ஹர்ஷா போக்லே “வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாக இருந்ததை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களிப்புகள் செய்ய வேண்டும். மேலும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட அதிக வாய்ப்புகள் கொடுக்கும் அணியை அவர் கண்டுபிடிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விமர்சித்து கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி பாய் முதல் நான்கு இந்திய கேப்டன் இருக்காங்க.. நான் ரசித்த கேப்டன் இவர்தான் – சுப்மன் கில் பேச்சு

இந்த நிலையில் இந்திய அணி 27 ஆம் தேதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளிலுமே வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -