நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நாளை ஜூன் 27ஆம் தேதி காலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு இரண்டு அரையிறுதி போட்டிகளும் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான ரிசர்வ் டே மற்றும் மழையால் போட்டி கைவிடப்பட்டால் யாருக்கு வெற்றி? என்பது குறித்து பார்க்கலாம்.
முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி ஜூன் 27 நாளை காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி ஜூன் 26 இரவு 8 மணிக்கு தூங்குகிறது.
எனவே வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி இரவில் இந்த போட்டி நடக்கின்ற காரணத்தினால் அடுத்த நாள் ரிசர்வ் டேவாக இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் போட்டி நடைபெறும் பொழுது அதிகபட்சமாக ஒரு மணி நேரமும், ரிசர்வ் டே நாள் 190 நிமிடம் ஆகவும் இருக்கும். இதற்குள் முடிவு தெரியாவிட்டால் போட்டி கைவிடப்படும்.
இதற்கு அடுத்து இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி நாளை இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அதே சமயத்தில் இது வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி ஜூன் 27 ஆம் தேதி காலை 10:30 மணி. எனவே இந்தப் போட்டி பகலில் காலையில் நடைபெறுவதால் ரிசர்வ் டேவாக அடுத்த நாள் கிடையாது. இந்தப் போட்டிக்கு அதே நாளில் தொடர்ச்சியாக கூடுதலாக 250 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது.
இந்த இரண்டு அரையிறுதி போட்டிகளுக்கும் கொடுக்கப்படும் ரிசர்வ் டே மற்றும் கூடுதல் நேரங்களிலும் போட்டி நடைபெற்று முடிவு தெரியாவிட்டால், லீக் மற்றும் சூப்பர் ஏட்டு சுற்றில் சிறப்பாக விளையாடிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க : அரையிறுதியில் ரோகித்தே விக்கெட்டை கொடுப்பார்.. 2022 உ.கோ-ல இந்தியாவுக்கு செஞ்ச சம்பவம் கிரேட்டானது – மொயின் அலி பேச்சு
இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இரண்டு அரையிறுதியிலும் போட்டி கைவிடப்பட்டால் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!






