“இது சாதாரண பிட்ச் கிடையாது.. விராட் கோலி மாதிரி ஒரு ஆள் இல்லனா கஷ்டம்..!” – ரோகித் சர்மா மகிழ்ச்சியான பேச்சு!

0
4840
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு வெற்றிகளை பெற்று அசத்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இன்று எட்டாவது வெற்றியாகக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடியான வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங் செய்ய கொஞ்சம் சவாலான ஆடுகளத்தில் விராட் கோலியின் அற்புதமான சதத்தின் உதவியுடன் 326 ரன்கள் குவித்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 83 ரன்களுக்கு சுருட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

இன்று இந்திய அணியின் எல்லா வீரர்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர். மிகப்பெரிய போட்டியாக கருதப்பட்ட போட்டியை சாதாரணமான முறையில் வென்று ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “கடைசி மூன்று ஆட்டங்களில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று பார்த்தால், நாங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பாக விளையாடியிருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். கடைசி ஆட்டத்திலும் நாங்கள் முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தோம். ஆனால் நல்ல ஸ்கோரை எடுத்தோம்.

எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் எப்பொழுதும் உச்சத்திற்கு வருகிறார்கள். இன்று விளையாடிய ஆடுகளம் எளிதானது கிடையாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடும் விராட் கோலி போன்ற ஒருவர் தேவைப்பட்டார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயரையும் மறக்க முடியாது.

இதே போல் எப்பொழுதும் செய்து கொண்டிருக்க முடியாது என்று உங்களுக்கு தெரியும். சமிக்கு எப்படி எல்லாம் சிறப்பாக அமைந்ததோ, அதேபோல் கடைசி இரண்டு போட்டிகளாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.

முதல் பந்தில் இருந்தே தாக்கி விளையாடுவது என்பதை நாங்கள் பேசி வைத்துக் கொள்வதில்லை. நானும் கில்லும் எங்களுடைய உள்ளுணர்வின்படிதான் விளையாடுகிறோம். விக்கெட் நன்றாக இருந்தால் நாங்கள் அதிரடியாக போகிறோம்.

ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் பெரிய போட்டிக்கான வீரர். அவர் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறார் ஆனால் ரேடாரின் கீழ் இருந்தார். ஆனால் இன்று அவர் பேட்டில் ரன்களும் விக்கெட்டுகளும் எடுத்து முன்னணிக்கு வந்திருக்கிறார்.

எதிரணி நம்மைவிட முன்னேறி விடக்கூடாது என்பதை நாங்கள் எப்பொழுதும் தொடர்ந்து பேசி வருகிறோம். நாங்கள் திரும்பி தொடர்ந்து எங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -