“நான் முதல் சதத்தை அடிக்க லேட் ஆனதுக்கு காரணம் இதுதான்.. இப்ப எனக்கு இதெல்லாம்..!” – சுப்மன் கில் சிறப்பு பேட்டி!

0
278
Gill

இந்திய கிரிக்கெட்டில் தற்போது மூத்த வீரர்கள் வெளியேறுவதற்கான காலக்கட்டம் நிலவுகிறது. இந்த நேரத்தில் புதிய வீரர்களை கண்டறிவதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கு விளையாடும் வீரர்களை கண்டறிய வேண்டிய தேவை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கிறது.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த தேடலில் மிகச் சரியாக கிடைத்தவர் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில். இந்திய அணிக்கு அடுத்த 10 ஆண்டுகள் விளையாடக்கூடிய வீரராகவும் அடுத்த விராட் கோலி அளவுக்கான திறமை கொண்டவராகவும் இருப்பவர் என்று பல முன்னாள் வீரர்களாலும் கூறப்படுகிறார்.

- Advertisement -

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்தில் வெளிநாட்டு ஆடுகளங்கள் கடினமாக இருப்பதற்கு காரணமே பவுன்ஸ் கொஞ்சம் அதிகம் இருக்கும் என்பதுதான். ஆனால் கில்லுக்கு பவுன்ஸ்தான் மிக எளிதாக விளையாடக்கூடிய காரணியாக இருந்து வருகிறது. இப்படி தனித்துவம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேனாக அவர் இளம் வயதிலேயே இருக்கிறார்.

மேலும் இந்த ஆண்டு அவருக்கு மிக அருமையான ஆண்டாக அமைந்தது. இந்திய மண்ணில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இரட்டை சதம். முதல் முதலில் ஐபிஎல் தொடரில் சதம் என அவர் எல்லாவற்றிலும் சதம் அடித்து விட்டார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக அவருடைய முதல் சதம் தவறிக் கொண்டே வந்தது. அங்கிருந்து அவர் அப்படியே அணியில் தொடர்ந்து இருக்க வேண்டியவர். ஆனால் காயம் காரணமாக அந்த நேரத்தில் வெளியில் இருக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தற்போது இந்த நேரம் குறித்து எப்படி இருந்தது என்று அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் எப்பொழுது பெரிய ரன்கள் அடிக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதெல்லாம் நான் அப்படியேதான் இருந்தேன். உண்மையில் எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே தேவையாக இருந்தது.

நான் சரியான தொடக்கத்தை பெற்றவுடன் நான் நானாக எப்பொழுதும் இருக்கிறேன். என்னுடைய காயத்தின் மறுவாழ்வு காலத்தில் எனது முதல் சதத்தை பெற வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

ஆனால் நான் சதத்திற்காக ஒருவேளை கடுமையான முயற்சிகள் செய்தேன் என்று நினைக்கிறேன். நான் டெஸ்டில் ஆஸ்திரேலியாவில் ஒரு சதத்தை தவறவிட்டேன். ஆனால் மீண்டும் அதுபோல நடக்கக் கூடாது என நினைத்தேன். நான் என் மீது அளவுக்கு அதிகமான அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறேன் என்று புரிந்து கொண்டேன்.

பிறகு குஜராத் அணிக்கு வந்து நாங்கள் ஐபிஎல் தொடரை வென்றோம். நான் நன்றாக செய்தேன், பிறகு எனக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து எனக்கு தொடர்ச்சியாக ஆறு போட்டிகள் கிடைத்தன. எனக்கு அங்கிருந்து கிளிக் ஆகியது, ஜிம்பாப்வேயில் நான் முதல் சதத்தை பெற்றேன். அங்கிருந்து நான் உணர்ந்து கொண்டேன் இனி நான் தொடர்ந்து செல்ல போகிறேன்!” என்பதை என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -