“ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க கோலி தான் முக்கிய காரணம்” – 2028 ஒலிம்பிக் அமைப்பாளர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்.!

0
1347

உலகெங்கிலும் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. இதற்கு முன்பு குறைவான நாடுகளில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மேலும் ஒரு முக்கியத்துவமாக வருகின்ற 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற இருக்கும் 34 வது ஒலிம்பிக் போட்டிகளிலும் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டின் டி20 வடிவத்தை சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான முடிவு கடந்த திங்கள்கிழமை ஒலிம்பிக் கமிட்டியால் எடுக்கப்பட்டது. அவர்கள் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரிக்கெட் உட்பட ஐந்து புதிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்த்துள்ளனர்.

1900 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. அதன் பிறகு 123 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்று இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் விளையாட்டுத் துறை இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்படுவதற்கு விராட் கோலியின் ஒரு முக்கியமான காரணம் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசி இருக்கும் லாஸ்ட் ஏஞ்சலஸ் நகரின் விளையாட்டு நிர்வாக இயக்குனர் நிக்கோலோ கேம்ப்ரியாணி ” என்னுடைய நண்பர் விராட் கோலி உலக அளவில் மூன்றாவது மிகவும் பிரபலமான விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். அவரை சமூக வலைதளங்களில் 340 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். இது டைகர் உட்ஸ் லிப்ரான் ஜேம்ஸ் மற்றும் டாப் ரெடி ஆகிய மூன்று பேரை இணைத்து பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் விராட் கோலியை மட்டும் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் சம அளவில் இருப்பது விராட் கோலி எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” இது லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் கமிட்டி கிரிக்கெட் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஆகியவற்றிற்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த வெற்றியான தருணம். கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் விதை கிரிக்கெட்டில் உலக அளவில் பிரபலப்படுத்துவதற்கும் பாரம்பரியம் மிக்க கிரிக்கெட் நாடுகளையும் தாண்டி மற்ற நாடுகளில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கும் உதவும் என தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி உலக அளவில் கிரிக்கெட் என்பதையும் தாண்டி பிட்னஸ் மற்றும் அவரது குணத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களால் பின்பற்றப்பட்டு வருகிறார். இன்று ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கும் அவர் காரணமாக இருந்திருப்பது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு பெருமையான தருணமாக இருக்கிறது. 510 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி 25,923 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 77 சர்வதேச சதங்கள் அடங்கும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -