முக்கிய வீரர்கள் இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் மற்றும் ஸ்ரேயாஸ் அதிரடி சதங்களுடன் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு மழையின் காரணமாக மாற்றி அமைக்கப்பட்ட 317 ரன்கள் என்கின்ற இலக்கை நோக்கி விளையாடி, 217 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.
இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்ட பிறகு திரும்பி வந்த இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் லபுசேன், வார்னர், ஜோஸ் இங்கிலீஷ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை உடனடியாக ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக இந்திய அணிக்கு பந்துவீச்சில் பெரிய நெருக்கடிகள் ஏதும் அந்த சமயத்தில் உருவாகவில்லை. மொத்தம் ஏழு ஓவர்கள் பந்து வீசிய அவர் 41 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு முன்பு நடைபெற்ற முதல் போட்டியிலும் 10 ஓவர்கள் வந்து வீசி 47 ரன்கள் விட்டு தந்து, ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவருடைய அனுபவமும் பந்து வீச்சு தரமும் எப்படியானது என்பதை, வாய்ப்பு பெற்ற இரண்டு போட்டிகளிலும் காட்டி இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டார். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இடம் பெற்றார்கள். ஆனால் சாகலுக்கு இடம் தரவில்லை.
இந்த நிலையில் அக்சர் படேல் காயமடைய, அவருடைய இடத்திற்கும் தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வினைதான் பரிசோதித்து வருகிறார்கள். இதற்கும் இந்திய அணி நிர்வாகம் சாகலை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு ட்வீட் செய்த சாகல் மிகவும் பெருந்தன்மையாக, நெகிழும் படி
“அஸ்வின் என்கின்ற பெயரே போதுமானது!” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். எப்பொழுதும் நகைச்சுவையாகவும் நட்புடனும் இருக்கும் சாகல் குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்!
Ravichandran Ashwin name is enough @ashwinravi99 #Legend 🇮🇳 #INDvsAUS
— Yuzvendra Chahal (@yuzi_chahal) September 24, 2023






