மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் எதிரொலியாக நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இப்போதே சில திட்டங்களை வகுத்திருக்கிறார் ரோகித் சர்மா அதைப்பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை அபாரமாக வென்றது. இதனால் கடைசி இரண்டு போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் புதிய வரலாறும் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவியது.
துரதிஷ்டவசமாக, இந்தூர் மைதானத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்தூர் மைதானத்தின் பிட்ச்சில் பந்து வழக்கத்திற்கும் மாறாக அதிக அளவில் டர்ன் ஆனது.
கிட்டத்தட்ட 9 டிகிரி வரை அதிகபட்சம் டர்ன் ஆனதால் பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறினார்கள். சராசரியாக 5 டிகிரிக்கு மேல் பந்து திரும்பியது. இதற்காக ஐசிசி “தரமற்ற பிட்ச்” என்று தரச் சான்றிதழையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்று ரோகித் சர்மா தலையீடு செய்வார் என்ற கருத்துக்களை விமர்சனங்களும் அவர் மீது முன் வைக்கப்பட்டன. இதற்கு குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் பதில் கூறியதாவது:
“தற்போது வரை எங்களுக்கு இந்திய அணியின் தரப்பிலிருந்து பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் வரவில்லை. நாங்கள் எப்போதும் போல சராசரியான பிட்ச்சை தயார் செய்ய உள்ளோம். பேட்டிங் பவுலிங் இரண்டும் சமநிலையில் எடுபடும்படியான பிட்ச்சாக இருக்கும்.” என பராமரிப்பாளர் பேசினார்.
மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தப்பட்டு, ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட்டார். அவரும் எதிர்பார்த்த அளவிற்கு இரண்டு இன்னிங்சிலும் செயல்படவில்லை. ஆகையால் நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் கே எல் ராகுல் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட உள்ளார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறும். இங்கிலாந்து கண்டிஷன்களில் கேஎல் ராகுலின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. அங்கு அவர்தான் பிளேயிங் லெவனில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முன்னோட்டமாக அவரை இறக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. இந்த முடிவினை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.






