நாளை அந்த டர்ட்டி ஜாப்பை செய்பவருக்கே வாய்ப்பு தருவேன்.. அவர் சிறிய வீரராக இருந்தாலும் பரவாயில்லை – மோர்னே மோர்கல் பேட்டி

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேட்டி அளித்துள்ளார்.

​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக, எதிரணியின் சவாலான சூழ்நிலைகளைச் சமாளிக்க அணியின் வீரர்கள் தங்கள் கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து மோர்னே மோர்க்கல் பேசும்போது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட, நாம் இப்போது நம்மை நாமே இன்னும் கொஞ்சம் கடினப்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியேறி, இதற்கு முன்பு நாம் சென்றிராத இடத்திற்குச் செல்ல வேண்டும். எனவே, காற்றுக்கு எதிராக நின்று கொண்டு கடினமான பந்துவீச்சை வீசும் ஃபாஸ்ட் பவுலர் அல்லது பந்துவீச்சாளர் போன்ற ஒருவருக்கு ஒரு வாய்ப்பு தேவைப்பட்டால், அதை நாம் அங்கீகரிக்க வேண்டும்”

“ஐம்பது விக்கெட்டுகளை வீழ்த்தாத போதிலும், காற்றுக்கு எதிராக நின்று அந்தச் சவாலான ‘டர்ட்டி ஜாப்’ வேலையைச் செய்யும் வீரரை நாம் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம்” என்று கூறி இருக்கிறார் என முடித்துள்ளார்.

- Advertisement -

​மேலும், ஸ்லோ ஓவர்-ரேட் காரணமாக ஐசிசி விதிப்படி புள்ளிகளை இழக்கக் நேரிடும் என்பதால், பந்துவீச்சாளர்கள், கேப்டன் மற்றும் முழு ஃபீல்டிங் யூனிட்டும் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

- Advertisement -