ஸ்ரேயாஸ் ஐயர் செய்யும் வேலை.. இந்திய அணிக்கு நல்ல அறிகுறி கிடையாது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​334 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் ஸ்ரீகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது “ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஓடிஐ போட்டிகளில் அவர் பிஃப்டி அடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அவர் அடிப்படையில் ஒரு அற்புதமான ஓடிஐ பேட்டர் தான், ஆனால் இப்போது அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. பேட் மற்றும் பந்து என இரண்டிலும் நமன் தீர் இந்திய அணிக்கு மிக முக்கியமானவராகத் தெரிகிறார், இது அணியின் நிலைக்கு நல்ல அறிகுறியே அல்ல”

“​அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட்டர் தான், ஆனால் எட்டாவது வரிசையில் அவரையும், ஐந்தாவது அல்லது ஆறாவது பவுலராக அவரையும் நம்பியிருப்பது நல்ல அறிகுறி இல்லை. குல்தீப் யாதவ் இந்த கண்டிஷன்ஸில் மிகவும் பயனற்றவராக இருக்கிறார். நியூசிலாந்து பேட்டர்கள் அனைவரும் அவரது பந்துவீச்சை எளிதாக அடித்து ஆடுகிறார்கள்”

- Advertisement -

“​அவர்கள் இன்னும் கொஞ்சம் சக்தியுடன் அடித்திருந்தால் பந்துகள் ஆஸ்திரேலியாவுக்கே சென்றிருக்கும். குல்தீப் தனது வேகமான ஜிப்பையும் இழந்துவிட்டார், அவர் தன்னை எப்படித் திருத்திக் கொள்ளப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மிகவும் அப் அண்ட் டவுன் பவுலராக மாறிவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -