நாங்கள் அர்ஸ்தீப் சிங்கை மும்பைக்கு மட்டுமே கொடுக்க நினைத்தோம்.. பின்னாடி இந்த முக்கிய காரணம் இருந்தது – நெஸ் வாடியா விளக்கம்

0
0

​பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் பரிமாற்றம் குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த ட்ரேட் குறித்து நெஸ் வாடியா பேசும்போது, “மற்ற சில அணிகளும் அர்ஷ்தீப் சிங்கை வாங்குவதில் ஆர்வம் காட்டின, ஆனால் அர்ஷ்தீப் மும்பை அணியுடனான ஒப்பந்தத்தில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம், மும்பை அணியும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தது என்று நினைக்கிறேன், நான் ஏற்கனவே சொன்னது போல இப்போது இரண்டு அணிகளுமே மகிழ்ச்சியாக இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் காயங்கள் குறித்த கவலைகளைப் புறந்தள்ளி அவர் மேலும் பேசுகையில், “அவரது அனுபவம் விலைமதிப்பற்றது என்று நான் நினைக்கிறேன், டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர், பீல்டிங்கில் மிகச்சிறப்பாகச் செயல்படும் அவர் அணிக்கு அபரிமிதமான உத்வேகத்தைக் கொண்டு வருகிறார், எனவே அவரை அணியில் வைத்திருக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

​இது குறித்து நெஸ் வாடியா மேலும் பேசும்போது, “அவரது பார்வையில் இருந்து பார்த்தாலும் கடந்த சில ஆண்டுகளாகக் காயங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் அவர் மிகவும் கடினமான காலங்களைச் சந்தித்துள்ளார், ஆனால் வரும் தொடரில் முற்றிலும் புத்துணர்ச்சி பெற்ற ஒரு புதிய ஹர்திக் பாண்டியாவை நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள்” என்று ஆழமாக வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -